இன்னிக்கு எல்லார் வீட்லயும் பொங்கல் பொங்கியிருக்கும். ரெண்டு பானை வச்சிருப்போம் ஒண்ணு சக்கரைப் பொங்கல், ஒண்ணு வெண் பொங்கல். வாழ்க்கையில இயல்பாவும் இருக்கணும், இனிப்பாவும் இருக்கணும். .கசப்பா இருக்கவே கூடாதுங்குறதுதான் பொங்கல் சொல்ற சேதி. இதை ஒரு நண்பன்கிட்ட சொன்னேன். பொங்கல் சொல்ற சேதியை கேட்கப் போறேன்னுட்டு போனான். காதுல சூடு பட்டுக்கிட்டுதான் திரும்ப வந்தான்.
எதையுமே லாஜிக்கோட பாத்து பொங்குவோம் மக்களே…ஹேப்பி பொங்கல்.
**பர்வீன் யூனுஸ்**
இந்த பறவைக்காய்ச்சல் பீதியிலும் KFC போய் சாப்பிடுபவனே உண்மையான சிக்கன் பிரியன்.
**ரமேஷ் ஏழுமலை**
மார்கழியில் எடுத்த பயிற்சிக்கு தை முதல் வாரம் முழுவதும் தேர்வு…!!!
# கோலம்
**மயக்குநன்**
என்னை நட்சத்திரமாகப் பார்க்காமல், உங்கள் வீட்டில் எரியும் சிறு விளக்காகப் பாருங்கள்!- கமல்.
ஏன்… டார்ச் லைட்டுக்கு இன்னும் பல்பு கிடைக்கலையா ஆண்டவரே..?!
**கோழியின் கிறுக்கல்!!**
ஜல்லிக்கட்டில காளையை அடக்கினால் தான் திருமணம் என்ற விதி இருந்திருந்தால்,
நானெல்லாம் முரட்டு சிங்களாகவே இருந்திருப்பேன்!!
**கடைநிலை ஊழியன்**
இந்த #பூமில பிறந்த எல்லாரும் #மாஸ்டர் தான் #ஈஸ்வரா
**ஜால்ரா காக்கா**
பூமி~இந்த உலகத்தை அழிக்கிறது கார்ப்பரேட் தான்
~ஹாட் ஸ்டார்ல படத்தை ரிலீஸ் பண்ணிட்டு எதையாவது பைத்தியம் மாதிரி ஒளறிட்டு இரு
**மயக்குநன்**
ஒரு புதிய சுதந்திரப் போராட்டத்தை நான் அறிவிக்கப் போகிறேன்!- கமல்.
‘பிக்பாஸ்’ வீட்டில் அடைபட்டு இருக்கிறவங்களுக்காகவா..?!
**ℍ???????????????????????????????????????????????? ????????????????**
போகி வர்ற வரைக்கும் காத்திருக்காம அவ்வப்போது சுத்தம் பண்ணிடுற பெண்கள் சுறுசுறுப்பானவர்களின் லிஸ்டில் சேர்ந்துவிடுகிறார்கள்.
**ரஹீம் கஸ்ஸாலி**
திருப்பூர் பருத்தி குடவுன்ல இருந்து போன் வந்துச்சு?
என்னன்னு?
நூறு மூட்டை பஞ்சு சும்மாதான் இருக்கு. உங்க கட்சிக்காரங்க பொங்கல் வைக்க தேவைப்படுதான்னு கேட்கறாங்க.
**James Stanly**
எலக்சன்ல எத்தன சீட்டு வேணும்..
அது அநாவசியம்.. சிக்கன் ரைஸ் குடுங்க.. போய்டுறோம்..
**-லாக் ஆப்**
�,”