aமழையும் மரியாதையும்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

சென்னை நண்பர் ஒருத்தருக்கு போன் பண்ணி, ‘என்ன பாஸ் மழை எப்படினு கேட்டேன். மனுசன் காண்டாயிட்டாரு. ‘என்னய்யா எப்படி பெய்யுதுனு கேட்குறியா? வந்து பாரு’னு சத்தம் போட்டுட்டாரு. அதுக்குப் பிறகுதான் அவரோட ஸ்டேட்டஸை பாத்தேன். ‘மகிழ்ச்சி வெள்ளமாய் கரைபுரண்டோட புத்தாண்டு வாழ்த்துகள்னு எனக்கு வாழ்த்து அனுப்பினது எவன் டா?’னு ரொம்ப மரியாதையா கேட்டிருந்தாரு. நாமதான் மழை நேரத்துல அவரை டிஸ்டர்ப் பண்ணிட்டோம்னு பேசாம இருந்துட்டேன்.

நீங்க அப்டேட்டை பாருங்க

**James Stanly**

தியேட்டர திறக்கவே இவ்ளோ சண்ட.. கண்டிப்பா ஸ்கூல்,காலேஜ் ஓப்பன் ஆகாது.. ஃபுல் ஆன்லைன்தான்..

போடு.. ஸ்டவ்வு மேல கடாயி..

**மயக்குநன்**

நான் திமுகவில்தான் அரசியல் பயணத்தை தொடங்கினேன்!- குஷ்பு.

காங்கிரஸ், பாஜகனு ‘பயணங்கள் முடிவதில்லை’ போல..?!

**ரஹீம் கஸ்ஸாலி**

தமிழக அரசியலை பாஜகதான் தீர்மானிக்கும்..! -எல்.முருகன்.

தமிழக அரசியலையா… அதிமுக அரசியலையா?

**நாகராஜ சோழன் MA.MLA**

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு. செய்தி

தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன், லாரன்ஸ் ~

சகாயம் வீடு எங்க இருக்குன்னு கேளு….

**ஜோக்கர்**

“தன்னம்பிக்கைக்கும், மன வருத்ததிற்கும்” வித்தியாசம் யாதெனில்,

“எனக்கு யாருமே தேவையில்லை” என்பதும்,

“எனக்கு யாருமே இல்லை” என்பதுமே..!!

#யதார்த்தம்..

**ℍ???????????????????????????????????????????????? ????????????????**

குட்மார்னிங்க்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம் இருக்குனு தெரியல ஆனா,

வேலை செய்றமோ இல்லையோ குட்மார்னிங் சொல்றதும் வேலையாதான் இருக்கு.

**PrabuG**

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினரானால் உங்கள் நட்பு வட்டம் பெருகும் – கமல்.

நீங்க அரசியல்வாதிதான, வாட்ஸப் க்ரூப் அட்மின் மாதிரி பேசுறீங்க..

**ச ப் பா ணி**

தைப்பூசம் பொதுவிடுமுறை பா.ஜ வுக்கு கிடைத்த வெற்றி-சேகர்

பா.ம.க:ஆமா இது நம்ம டயலாக்கில்ல

**நாகராஜ சோழன் MA.MLA**

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு. செய்தி

தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன், லாரன்ஸ் ~

சகாயம் வீடு எங்க இருக்குன்னு கேளு….

**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**

இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளைச் சம்பளம் பெறத்தக்க பணியாக அங்கீகரிக்க வேண்டும்

~ கமல்ஹாசன்.

# அப்படியே எங்க சம்பளத்தை அவங்க கிட்ட இருந்து வாங்கி தர்றதுக்கும் எதாவது ஏற்பாடு பண்ணுங்க ஆண்டவரே..

**மயக்குநன்**

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ரூ.60 ஆயிரம் கடன் இருக்கிறது!- கமல்.

1000 ரூபாய், 2500 ரூபாய்னு கொடுக்கிறதே அதைக் குறைக்கத்தான் பாஸ்..!

**சரவணன். ℳ**

வேலை கொடுக்கும் முதலாளியாக இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் மாற்றும் – கமல்ஹாசன்.

எல்லோரும் முதலாளியாகி யாருக்கு வேலை கொடுப்பாங்களாம்…

**-லாக் ஆஃப்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share