Yஎனக்கு 2,000 உனக்கு 500: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

புத்தாண்டு டாஸ்மாக் வசூல் போன வருசத்தை விட குறைஞ்சுடுச்சாமே… நைட் கொண்டாட்டத்துக்கு தடை போட்டுட்டாங்களே அதனாலதான் இந்த நட்டம். ஆனா நம்ம குடிமகன் ரொம்ப கை சுத்தமானவன்யா. ‘எனக்கு நீ 2500 ரூபா கொடுக்கும்போது உனக்கு நான் ஐநூறு ரூபா தரமாட்டேனா?னு கேட்டு பொங்கல் பணம் 2500 ரூபாய்ல 2 ஆயிரத்தை வீட்டுக்கார அம்மாக்கிட்ட கொடுத்துட்டு பாக்கி 500 ரூபாயை அரசாங்கத்தோட அக்கவுண்ட்லயே டாஸ்மாக் மூலமா போட ஆரம்பிச்சிட்டாங்க.

பொங்கல் பரிசு அங்கங்க பொங்கிக்கிட்டிருக்கு. நீங்க அப்டேட்டை பாருங்க.

**kalaingarist**

2021-ல் அதிமுக ஆட்சியமைத்ததும்

கருணாநிதி மரணம் குறித்து விசாரணை – ராஜன் செல்லப்பா #

ஏன் இப்ப பிஜேபி ஆட்சி நடக்குதா ?

**மயக்குநன்**

காங்கிரஸ், திமுகவின் காலம் முடிந்துவிட்டது!- குஷ்பு.

அதான்… நைஸா பாஜகவுக்கு வந்துட்டாங்க போல..?!

**நெல்லை அண்ணாச்சி**

சுற்றிலும் மூடப்பட்ட தியேட்டரில்- 100% occupancy..

வெளியே ( open air ) சமூக இடைவெளி… # என்னடா…இது….குளறுபடி..!!!

**mohanram.ko**

மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் – பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர்.

அதுக்கு தான் தியேட்டர்ல ஆப்பரேட்டர் ரூம்ல ரெண்டு ஓட்டை வச்சிருக்காங்க…

**amudu**

ஆன்மிக ஆட்சியை நடத்தும் வல்லமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு. -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஜெயலலிதா இருக்கும் போது மண்சோறு சாப்பிட்டது, அலகு குத்திக் கொண்டதை சொல்றாரோ.!?

**நாகராஜ சோழன் MA.MLA**

உலகளவில் சிசிடிவி கண்காணிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

–செய்தி

ஆனா முக்கியமான நேரத்துல மட்டும் சரியா வேலை செய்யாமல் போயிடும், இது அப்போலோ ஹாஸ்பிடல் இருந்து போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் பொருந்தும்…

**mohanram.ko**

சென்னை டூ மழை – டிசம்பர் முடிஞ்சிடிச்சி வரமாட்டேன்னு இருந்தா, ஜனவரியிலும் வந்தா என்னப்பா பண்றது…. ஒன்லி பில்டப் மட்டும்தான்ப்பா… விட்டுடுப்பா…

**James Stanly**

அதான் மாஸ்க் இருக்குல்ல..

அவங்க மாஸ்க்க கழட்டிதான்டா ஓப்பனிங் சீனுக்கு வீசுவானுங்க..

**PrabuG**

நீங்க 2500 ரூபாயை வாங்கிட்டு நேரா சரக்கடிக்க வந்ததைக் கூட தாங்கிக்கிட்டேன்யா.

ஆனா அந்தக் கரும்பை சைட் டிஷ்ஷா யூஸ் பண்ணீங்க பாரு..

அதை என்னால மன்னிக்கவே முடியாதுய்யா..

**தர்மஅடி தர்மலிங்கம்**

அதிமுகவை தாயில்லாத பிள்ளைகளாக நினைத்து மக்கள் ஆதரிக்க வேண்டும் – அமைச்சர் செல்லூர் ராஜு!

‘தாய்’ இல்லாத பிள்ளைகளாக இருந்தாலும் அதான் நல்லா ‘வாய்’ உள்ள புள்ளைகளா இருக்கே…

**லாக் ஆஃப்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share