இரட்டை குழந்தைய ஈஸியா ஹேண்டில் பண்ணுவேன்னு புதுச்சேரியோட புது ஆளுனர் தமிழிசை சொல்லியிருக்காங்க. இந்த பேட்டியை பாத்துட்டு நம்ம அதிமுக நண்பரு விழுந்து விழுந்து எந்திரிச்சி எந்திரிச்சு சிரிக்கிறாரு. என்னண்ணே இப்படின்னு கேட்டா… ரெட்ட குழந்தையை கூட எப்படியோ சமாளிக்கலாம். ஆனா அதிமுக கடந்த நாலு வருஷமா ரெட்டை பொண்டாட்டியல்ல சமாளிச்சுக்கிட்டு இருக்கு. எங்களை பீட் பண்ண முடியாதுங்குறாரு.
நீங்க அப்டேட் பாருங்க
**amudu**
டெல்லி போலீஸ் துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன். -அமித் ஷா.
சாலையில் ஆணி பதிச்ச துணிச்சலை சொல்றாரோ.
**மெத்த வீட்டான்**
பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு காரணம் முந்தைய அரசுதான் – பிரதமர் மோடி #
நல்லவேளை நேருவை சொல்லல !
**நாகராஜ சோழன் MA.MLA**
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துங்கள்: அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
வாய்ப்பு இல்லீங்க ஜட்ஜ் அய்யா, வாய்ப்பு இல்லீங்க…
**Memes Tamizha**
ஜீ’யால தான் எங்க வீட்டுல 3 வேளையும் அடுப்பு எரியுது..
~என்னடா சொல்ற உண்மையாவா?
ஆமா கேஸ் ரேட்ட ஏத்திகிட்டே போனா 3 வேளையும் அடுப்பு தானே எரியும்!
**Harithranidhi raja**
மொபைல் நம்மகிட்ட சிக்கியிருக்கா, நாமதான் மொபைல்கிட்ட சிக்கியிருக்கமான்னு அடிக்கடி சந்தேகம் வருது..
இது எனக்கு மட்டுமா..?!
**ச ப் பா ணி**
சில நேரங்களில் கூகுள் மேப் பார்த்தால் தலை சுற்றும்..
இன்று “தல” யையே சுற்ற வைத்துவிட்டது கூகுள் மேப்
**மயக்குநன்**
தமிழகத்தில் சிறந்த ஆட்சி வழங்கிய ஜெயலலிதாவின் படத்துக்கு பிரதமர் மோடி மலர் தூவியது தவறில்லை!- எல்.முருகன்.
‘ஏ ஒன்’ பதில் சார்..!
**பாலசுப்ரமணி**
தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழானு தெரிஞ்சுக்கோ..
பைக்ல போனவன் சைக்கிளில் வந்தா பெட்ரோல் ரேட் கூடிடுச்சு தெரிஞ்சுக்கோ..
**PrabuG**
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்..
பெட்ரோல வாங்க முடியுமா..
**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**
புதுவை அரசு வரும் 22 ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் : தமிழிசை
இதுக்கு கிரண்பேடியே பரவால்ல : நாரயணசாமி
**கோழியின் கிறுக்கல்!**
நடுத்தர வர்க்கமாக நான்!
எனக்கு எட்டா பெட்ரோலாய் நீ!!
**-லாக் ஆஃப்**�,”