இன்னிக்கு (பிப்ரவரி 17) சமையல் எரிவாயு எடுத்துட்டு வந்தபோது ஒரு சிலிண்டர் 796 ரூபாய் பில் போட்டாங்க. அப்ப எங்க அண்ணி ஒரு வார்த்தை சொன்னாங்க… வீட்டுக்கு வீடு கழிவறைக்கு 12 ஆயிரம் நிதி ஒதுக்குறாங்களாமே… அதுபோல மோடிக்கிட்ட சொல்லி வீட்டுக்கு வீட்டை பழையபடி நல்ல உயரத்துல கட்டை அடுப்பு கட்டித் தர்றத்க்கு நிதி ஒதுக்க சொல்லு, அப்பதான் இனிமே நாம சமாளிக்கலாம்னு சொன்னாங்க. வீட்டுக்கு வீட்டு விறகு அடுப்பு கட்டித் தர மோடிக்கு ஐடியா கொடுத்த தாய்க்குலம் வாழ்க
நீங்க அப்டேட் பாருங்க
**Siva_KS**
பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் அவர் வெற்றி பெறுவார் – L.முருகன்
Donald Trump : நான் தோத்து 2 மாசம் ஆச்சு
**mohanram.ko**
விலை கொடுத்து வாங்க முடியாத விஷயங்கள்னு இந்த உலகத்தில் நிறைய இருக்கு….. அன்பு, பாசம், பெட்ரோல், டீசல்
**சரவணன். ℳ**
எதுக்கு பான்பராக் மென்னுக்கிட்டே வண்டியை ஓட்ட சொல்றே…?
இல்லன்னா ரெண்டு மடங்கு அபராதமாமே…
அடேய் பான்பராக் வாயா…! அது, பாஸ்ட்டேக் டா…
“*amudu**
பழைய திட்டப் பெயர்களை மாற்றி புதிய திட்டங்களாக முதல்வர் அறிவிக்கிறார். -ஸ்டாலின்.
இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும்ன்னு பழைய வசனத்தையே, நீங்க புதுசு போல சொல்லிட்டு இருப்பீங்களே, அது போலவா.
** டீ இன்னும் வரலை…**
டேய்…. மச்சான்…மச்சான்
சொல்றா…
எந்த ரோட்ல
பெட்ரோல் இல்லாம நிக்கிற
**நாகராஜ சோழன் MA.MLA*”
செல்ல தாயி மகன் வடிவேலு தானே நீ, ஏண்டா கெழவி செத்தத்துக்கு கூட ஊருக்கு வரலியேடா…
பெட்ரோல் போட காசு இல்லன்னே…
**balebalu**
மாற்று எரிபொருள் ன்னு சொல்லுறாங்களே ? என்னவா இருக்கும் ?
B டீம் மாதிரி B Fuel ன்னு ஏதாவது இருக்கோ ?
**mohanram.ko**
டோல்கேட்ல, நீ பணம் கட்டுவ, உனக்கு பிறகு உன் பையன் கட்டுவான், அவனுக்கு பிறகு அவன் பையன் கட்டுவான். ஆனா ரோடு….. எப்பவோ போட்டது…
Petrol 100 rs per litre. Not even single drop can be wasted ???? pic.twitter.com/qX9YfOVRN9
— ℠???? (@Spidey_e) February 15, 2021
**மயக்குநன்**
ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக மக்கள் சேவையாற்றுகிறார்!- ஓபிஎஸ்.
ரெண்டாவது மகனுக்கும் தேர்தல்ல போட்டியிட சீட் உறுதியாயிடுச்சு போல..?!
**சித்ரா தேவி**
பாஸ்டேக் கட்டாயம். நீக்க முடியாது – மத்திய அரசு
பாஸ்டேக் கட்டற பணம் எந்த அக்கவுண்ட்க்கு போகுது ? IDBI வங்கிக் கணக்குக்கு.
IDBI வங்கி விரைவில் தனியார் மயமாக்கப்படும் – நிதி அமைச்சர்.
தட் “அத எதுக்கு உருட்டிக்கிட்டு
**கோழியின் கிறுக்கல்!!**
என்னாச்சு?’ என்பதற்கு பதிலாக வரும் சிலரின் புன்னகை,
‘உன் வேலையைப் பாரு’ என்றும் பொருள்படும்!!
**- லாக் ஆஃப்**�,”