ஹீரோ ஹீரோயினுக்கும் சமூக இடைவெளி: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

சினிமா தியேட்டர் எப்படா திறப்பாங்கனு இருக்கு… டிவியில படம் பாத்து பாத்து போரடிச்சு போயிடுச்சுனு டீக்கடையில பேப்பர் படிச்சுக்கிட்டே சொன்னாரு நம்ம அண்ணன் ஒருத்தரு.  அப்ப மாஸ்டர் குறுக்கால,  ‘அண்ணே கொரோனா காலத்துல படம் எடுத்தா பாக்குறவங்க மட்டுமில்ல, படத்துல நடிக்கிறவங்களும் சமூக இடைவெளியோடுதான் இருக்கணுமாம்.  அதாவது ஹீரோவும் ஹீரோயினும் தொட்டுக்கவே கூடாதாம். ஆறு அடி கேப்புலதான் நின்னு லவ் பண்ணனும்னு  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டிருக்காங்களாமே அப்படியா?’னு கேட்டாப்ல.

ஐயோ…இந்த மாதிரி அறிவெல்லாம் வச்சுக்கிட்டு எப்படிண்ணே  டீ போட்டுக்கிட்டிருக்கீங்கனு கேட்டுட்டு டீ குடிச்சவனெல்லாம் ஓடிட்டாங்க. நீங்க அப்டேட்டை பாருங்க.

**சரவணன். ℳ**

சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளது – கேப்டன் தோனி.

ஜாதவ் ~ “தல, நான் வேணா போய்ட்டு பிளம்பரை கூட்டிட்டு வரவா… “**

**மயக்குநன்**

கூட்டணி பற்றி கருத்து சொல்ல பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தலைவர் இல்லை!- கடம்பூர் ராஜு.

அப்ப… ராஜேந்திர பாலாஜிதான் பாஜக தலைவரா பாஸ்..?!

**மித்ரன்**

அக்.15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் – செய்தி #

~ இதுக்கு தான் கத்துச்சா அந்த பல்லி..?!

**படித்ததில் பிடித்தது **

அவர் இறந்து விட்டார்  ????????

அடக்கம் செய்யணும்

சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!

.

மெல்ல எட்டிப் பார்த்தேன்

மூச்சு இல்லை – ஆனால்

இப்போதுதான் இறந்திருந்தார்

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!  

.

இருபது வருடங்கள்

முன்னாடி – அவர் மனைவி

இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!!

என்று யாரும் கேட்காத

நேரத்தில் – அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை…!!

.

பொண்டாட்டி போனதுமே

போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று

காதுபட மருமகள் பேசியபோது

அவர் இறந்திருந்தார் அப்போதும்

யாருமே கவனிக்க வில்லை…!!

.

தாய்க்குப் பின் தாரம்

தாரத்துக்குப் பின் ..

வீட்டின் ஓரம் …!!!

என்று வாழ்ந்த போது – அவர்

இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை ..!!!

.

காசு இங்கே

மரத்திலேயா காய்க்குது – என்று

மகன் அமிலவார்த்தையை

வீசிய போது..!!!

அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை…!!

.

என்னங்க…!!!

ரொம்ப தூரத்திலே இருக்குற

முதியோர் இல்லத்திலே விட்டு

தலை முழுகிட்டு வந்திடுங்க…!!!

என்று காதிலே விழுந்த போதும்

அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை…!!!

உனக்கென்னப்பா…!!!

பொண்டாட்டி தொல்லை இல்லை

என்று வாழ்த்துவது போல

கிண்டலடிக்கப் பட்ட போது

அவர் இறந்திருந்தார்..!!!

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

.

இப்போதுதான்

இறந்தாராம் என்கிறார்கள்..!!!

எப்படி நான் நம்புவது..???

நீங்கள் செல்லும் வழியில்

இப்படி யாராவது

இறந்து கொண்டிருப்பார்கள்…

ஒரு வினாடியாவது நின்று

பேசி விட்டுச் செல்லுங்கள்..!!!

.

இல்லையேல்…!!!!

.

உங்கள் அருகிலேயே

இறந்து கொண்டிருப்பார்கள்

புரிந்து கொள்ளுங்கள் ..

.

வாழ்க்கை என்பது

வாழ்வது மட்டுமல்ல..!!!

வாழ வைப்பதும்தான் ..!!!!

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.????????

**மயக்குநன்**

ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல!- உயர் நீதிமன்றம்.

சமீபத்திய சில தீர்ப்புகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தோணுது எசமான்..!

**தர்மஅடி தர்மலிங்கம்**

இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியில் 60 ஆயிரம் வீரர்களை குவித்துள்ள சீனா..!

இந்த சீனா இன்னும் எத்தனை ‘ஆப்’ப தான் காவு வாங்குமோ!

**அபிவீரன்**

கொரோனா தொற்றை இசை மூலம் குணப்படுத்தும் முயற்சி – குஜராத்தில் உள்ள வதோதரா மருத்துவமனையில் இசை தெரபி

செவிடனுக்கு கொரோனா வந்தா என்ன பண்ணுவ?

**முகிலன்**

மத்த டீம் எல்லாம் பிராக்டிஸ் பண்ணிட்டு வந்து பெர்ஃபாமன்ஸ் பண்றாங்க, சிஎஸ்கே மட்டும்தான் இன்னும் பிராக்டீஸ் மட்டுமே பண்ணிக்கிட்டு இருக்கு.

**கடைநிலை ஊழியன்**

எந்த பொருள் வாங்கணும்னாலும் flipkart , amazon இப்பிடி online shopping site லயே ரேட் கம்பேர் பண்ணி பாக்க பழக்கிட்டானுங்க..

ஆனா சில பொருள் கடையில போய் பாத்தா, ரேட் கம்மியாவே இருக்கு..

**-லாக் ஆஃப்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share