ரெண்டு வாரமா யார் வீட்டுக்கு யார் போறா. யாருக்கு யார் ஆதரவுன்னுதான் தமிழ்நாட்ல முக்கிய பிரச்சினையா இருந்துச்சு. ஆனா, எங்களுக்குள்ள எந்த இடைவெளியும் இல்லைனு ஓபிஎஸ் இபிஎஸ் பத்தி பல அமைச்சர்கள் பேட்டிகள்ல சொல்லக் கேட்டிருக்கேன். உண்மைதான்யா… இன்னிக்கு அதிமுக ஆபீஸ்ல அதை கண்கூடா பாத்தேன். கொரோனா காலத்துலயும் எந்த இடைவெளியும் இல்லாம சமூக இடைவெளியும் இல்லாம கூடி நிக்கிறீங்களே. நீங்க சொன்னது இந்த இடைவெளிதானா… கொரோனா எச்சரிக்கையெல்லாம் ஊருக்குதான் உபதேசமா…
**ஜோக்கர்…**
“உம்முன்னு இருக்கிற பொண்ணு”கிட்ட போயி காரணம் கேட்குறதும்,
“ஆப் பண்ணாத அயர்ன் பாக்ஸ” தூக்கி காதுல வைக்குறதும் ஒண்ணுதான்..
**சரவணன். ℳ**
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ்.
அப்புறம் ஏன் கண்ணு கலங்குது…?
அது வலி வேற டிபார்ட்மெண்ட்…
**சிவம்**
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறலாம் என்று மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? -உயர்நீதிமன்றம்
முதல்வரா போட்டி போடாமலே முதல்வர் பதவிக்கு எங்க எடப்பாடியார் போன தடவை செலக்ட் ஆனதை வச்சு தான்..!
**தர்மஅடி தர்மலிங்கம்**
உலகம் ஆயுதமயமாக்கப்படுவதை நாம் அனைவரும் தடுத்திட வேண்டும் – பிரதமர் மோடி!
# அதானே! ஆப் இருக்கும் போது ஆயுதம் எதுக்கு.??
**PrabuG**
கட்சிக்கு ஓபிஎஸ், ஆட்சிக்கு இபிஎஸ்ஸாம்.
அப்ப தேர்தல் என்ன தக்காளி தொக்கா..
**மயக்குநன்**
அதிமுகவின் அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா மூலம் எனக்கு கிடைத்தது!- மதுசூதனன்.
மத்தவங்களுக்கு கிடைச்ச பதவியெல்லாம் கூவத்தூர் மூலம் கிடைச்சதுன்னு குத்திக் காட்டுறாரு போல..?!
**தர்மஅடி தர்மலிங்கம்**
தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இருக்கும்!- ஓபிஎஸ்.
நீங்க, ‘தியான’ச்செம்மல்… ஸாரி… தியாகச்செம்மல் தலைவரே..!
**ஊர்க்காவலன்™**
யாரும் “தொட்டு கூட” பார்க்க முடியாத இடத்துல இருக்கனுமுனா கொரோனாவோடத்தான் இருக்கனும்….
கொஞ்ச நேரத்துல சலூன்கடைல இருந்த பீலிங்கு https://t.co/yFX40JSWuE
— ????எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran) October 7, 2020
**Cibi Chakravarthy**
தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் புறக்கணிப்பு!
இங்கு மத்திய அரசு என்ன சொன்னாலும் `ஆமாம்’ போடும் பரிதாபமான அரசாக இருக்கிறது. எதைப் புறக்கணித்தாலும் இவர்களுக்கு கவலையில்லை. பதவி ஒன்றே குறிக்கோள்!
`பதவி மட்டும் முக்கியம் பிகிலு!’
**ரஹீம் கஸ்ஸாலி**
முதல்வர் வேட்பாளரை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறேன். எதிர்க்கட்சிகள் கனவு பலிக்கவில்லை..!- ஓ.பி.எஸ்
உங்கள் கனவும் பலிக்கவில்லையே…?!
**மயக்குநன்**
பள்ளிகள் திறப்பதைவிட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்!- செங்கோட்டையன்.
உயிர் முக்கியம்னு நெனச்சா… டாஸ்மாக் கடைகளையும் திறக்காம இருந்திருக்கணுமே தலைவரே..?!
**-லாக் ஆஃப்**�,”