mசீசனுக்கேத்த சிறுதொழில்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

டீக்கடையில யூஸ் அண்ட் த்ரோ கப்புல டீ குடிச்சிட்டிருந்தப்ப, ஒரு முரட்டு சிங்கிள் அண்ணன் மேகத்தை முறைச்சுக்கிட்டே நின்னாரு. என்னண்ணே டீ குடிக்கிற நேரத்துல ஜிந்தனைனு கேட்டேன்… ‘இல்ல தம்பி, மெட்ராஸுக்கு போகணும் இ பாஸ் பத்து வாட்டி போட்டுப் போட்டுப் பாத்தேன் கிடைக்க மாட்டேன்றுச்சு. அதான் இந்தப் பக்கம் ஊரடங்கு ஜோசியர்னு ஒருத்தர் இருக்கறதா சொன்னாங்க. நம்ம ஜாதகத்தை கொடுத்து 500 ரூபா பணமும் கொடுத்தா, நம்ம நட்சத்திரத்தை வச்சி, எந்த கிரக சூழ்நிலையில இ பாஸ் அப்ளை பண்ணனும், எப்ப கிடைக்கும்னு புட்டுப் புட்டு வைக்கிறாராம். புதன் சனிக்கிழமைதான் பாக்குறாரு. அதான் அவரைத் தேடி வந்தேன். டோக்கன் வாங்கிட்டேன், 127 ஆவது டோக்கன்… டீ குடிச்சு டீ குடிச்சு நேரத்தை ஓட்டிக்கிட்டிருக்கேன்’ன்னாரு. அப்படிக்கா டீ போட்டுக்கிட்டிருந்த மாஸ்டர பாத்தேன். சிரிச்சாரு… சிறுதொழில் குறுதொழில் ஊரடங்கால நலிஞ்சு போச்சுனு எவன் சொன்னது… இ பாஸ் ஜோசியமும் நல்ல தொழில்தானேனு அவரு வயித்தெரிச்சலோடு சொன்னது எனக்கு மட்டும்தான் கேட்டுச்சா என்ன? அப்டேட்டை படிங்க.

சீசனுக்கேத்த சிறுதொழிலதிபராதிகிட்ட அந்த இ பாஸ் ஜோசியர் கிட்ட டோக்கன் போட்டுட்டு வாரேன்…

#FriendshipDay னு சொன்னா இந்த பாட்டு தான் மனதில் வரும்..

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா..#HappyFriendshipDay pic.twitter.com/8e14QDs2w4

— கடைநிலை ஊழியன் (@Suyanalavaathi) July 30, 2020

*கோழியின் கிறுக்கல்*

முழு நாடும் கொரானாவுடன் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, Sanitizersக்கு 18% GST போட்டவரிடம் என்ன நியாயத்தை எதிர்பார்த்து விட முடியும்!?

*☘ யாத்ரீகன்*

சாமி ஒண்ணு சொல்லுது, பூசாரி ஒண்ணு சொல்லுது, எத தாண்டா நாங்க கேக்றது.கொலயா கொல்றானுகளே..

*எனக்கொரு டவுட்டு*

ஏன்டா, ரபேல் விமானத்தை கஷ்டப்பட்டு வாங்கி வச்சா, அடுத்த தடவை ஊரடங்கு போட்டா ட்ரோனுக்கு பதிலா ரபேல் விமானமா வரும்னு கேட்குறே..!

*மயக்குநன்*

தமிழக அரசு வழங்கும் முகக்கவசம் மூன்று அடுக்குகள் கொண்ட தரமான துணியினால் செய்யப்பட்டுள்ளது!- அமைச்சர் உதயகுமார்.

இதைத்தான் ‘மூன்றடுக்கு பாதுகாப்பு’னு சொல்றாங்களோ..?!

*சப்பாணி*

அவன் தீபாவளி போனஸ் பற்றி கனாவில் இருந்தபோது.. இம்மாத சம்பளத்தில் 40%பிடித்துவிட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

*சரவணன். ℳ *

3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு.

பேசாம நீ பழையபடி திரும்ப உன் குலத்தொழிலுக்கே போய்டு சிவாஜி…

*இதயவன்*

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

எதுக்கு கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிகிட்டு..ஷட்டரை இழுத்து மூடிற வேண்டியது தான 2020 முழுவதும்?!!

*மயக்குநன்*

திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்!- திரைப்பட வர்த்தக சபை சார்பில் அரசுக்கு கோரிக்கை. அதுசரி… கொரோனாவும் ‘படம்’ பார்க்கணும்னு ஆசைப்படும்ல..?!

*திரு*

School leave விட்டா பசங்க சந்தோஷப்படறது போயி இப்ப நாமே சந்தோஷமாகிடறோம். காலைல எழுப்பி, குளிப்பாட்டி, லேப்டாப் முன்னாடி உட்கார வச்சி, வால்தனம் பண்ணாம பார்த்துக்கிட்டு, mute, unmute, video on, off, கேள்விக்கு பதில பிட் சப்ளை பண்றது போன்ற வேலைல இருந்து விடுதலை

*கோழியின் கிறுக்கல்!!*

ரஃபேல் விமானத்தை ப்ரான்ஸில் இருந்து கிளப்பும் பொழுது டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டதா, இல்லையா!?

*சரியான சாட்டையடி..*

“தமிழ் மட்டுமே தெரிந்தால் தமிழ்நாடு தாண்ட முடியாது” என்ற தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க செயலாளரின் கருத்திற்கு, ஒரிசா மாநில முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழிலேயே படித்து, முதல் முதலாக தமிழிலேயே IAS தேர்வெழுதி கலெக்டர் ஆன R. பாலகிருஷ்ணன் IAS அவர்களின் சாட்டையடி.

இது “தொழில் லாபம்” கருதிய கருத்து.

முதல் போட்டவர்கள் அதைக் காப்பாற்ற முற்படுவது இயற்கை தான். ஆனால் அந்தக் கருத்தை ஓர் அறிவியல் உண்மை போல முன்வைப்பது முறையல்ல.

நான் தமிழ் மட்டுமே படித்தவன்.

தமிழ்நாட்டு எல்லையை 35 ஆண்டுகளுக்கு முன்பு தாண்டினேன்.

எனது பணி என்னை இந்தியாவின் எல்லா மூலைமுடுக்குகளுக்கும் கொண்டு சென்றது. நமது நாட்டில் நான் கால் வைக்காத மாவட்டங்கள் பத்து இருபது கூட இருக்காது. எத்தனை மொழிகள்… எத்தனை இடங்கள்…

உலகின் எல்லா கண்டங்களிலும் உள்ள ஏராளமான நாடுகளுக்குப் பணி தொடர்பாக சென்றிருக்கிறேன். தேவைப்படும் போது எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள முடியும்.

திருப்பூரைத் தேடி உடுத்துகின்றன தேசங்கள்.

நமது தொழில் முனைவோரும் உழைப்பாளிகளும் பல கண்டங்களில் வாழ்கிறார்கள். அதனால் தான் தமிழ் மொழி பல நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது.

எனவே தமிழ் கற்றால் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்ட முடியாது என்றெல்லாம் பேசுவது உள்நோக்கம் உள்ளதே.

**balebalu**

கொரோனாவே “ஆளை விடுங்க சாமி” ன்னு ஒரு நேரத்தில் ஒடிபோனாலும், இவங்க இ பாஸ் வேண்டும் ன்னு சொல்லுறதை நிறுத்தமாட்டாங்க போல !

**லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share