டீவில எதுனா நல்ல படமா பாக்கலாம்னு ஒவ்வொரு சேனலா மாத்திகிட்டே இருந்தேன். அப்ப நியூஸ் சேனல்ல பிரேக்கிங் போறத பார்த்துட்டு என்னடான்னு புது பிரேக்கிங்னு சேனல் மாத்துறத நிறுத்துனேன். அரியர் எழுத அப்ளை பன்னிருந்தாலும் பாஸுன்னு அறிவிப்பு வந்திருக்கு. அதப் பார்த்து என்னோட இருந்த காலேஜ் பசங்கள்லாம் சந்தோஷமா இருந்தப்ப, என்னடா வாழ்க்கை இதுன்னு எனக்கு மட்டும் தோனுச்சு. ஏன்னு கேக்குறீங்களா அது ஒரு நீண்ட ப்ளாஷ் ஃபேக்.
காலேஜ்ல எக்ஸாமுக்கு போனா ஐடி கார்டு எங்க, விசிட்டிங் கார்டு எங்கன்னுலாம் கேட்க தொலைஞ்சு போச்சுன்னு சொன்னாலும் நம்பாம சூப்பர்வைசர் வாசல்ல நிக்க வைக்க, எதுக்கெல்லாம் போகாத மானம் அங்க மட்டும் போக, சரிதான் அடுத்த செமஸ்டர்ல பாத்துக்கலாம்னு, அடுத்த செமஸ்டர்ல பாத்துக்கலாம்னு சில பல அரியர்களோட வெளியே வந்தாச்சு.
வேலையப் பாத்துக்கிட்டே அரியருக்கு படிச்சி, அரியர் டைம் டேபிள் தெரியாம யார் யாருக்கோ போன் பண்ணி கேட்டு, இன்னைக்கு எக்ஸாம்னா நேத்து நைட்டு டைம்டேபிள ஒட்டி அதப் பார்த்து ஒருத்தன் எனக்கு கூப்பிட்டு நைட்டோட நைட்டா அடிச்சி புடிச்சி ஓடி எழுதி ஒருவழியா டிகிரிய கம்ளீட் பண்ணா….இவங்க அரியருக்கு அப்ளிகேஷன் போட்டவங்கள்லாம் பாஸுன்னு சிம்பிளா முடிச்சிட்டு போய்ட்டாங்க…
நீங்க அப்டேட்ட பாருங்க.
**நெல்லை அண்ணாச்சி**
கொரோனா காலத்திலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி ” பாதையில் செல்கிறது
…மோடிஜி
# உண்மை மட்டுமே பேசுன காந்தி பிறந்ததும் … குஜராத்து தான்…
சிறப்பு…….!!!! pic.twitter.com/FP5nN0e6La
— நாடு எங்க போகுது? (@Piramachari) August 25, 2020
**சரவணன். ℳ**
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை – அமைச்சர் செங்கோட்டையன்..
கொள்கைன்னா எப்படி? எதையும் எதிர்த்து கேட்காம, வழக்கு போடாம இருக்கறதுங்களா…!
**தர்ம அடி தர்மலிங்கம்**
ஆஃபீஸ்ல மாசம் மாசம் வைக்கிற மந்த் எண்ட் மீட்டிங் மாதிரி தான் மாசக் கடைசியில மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தற இந்த ஆலோசனை கூட்டம்!
நெப்போலியன் பரிதாபங்கள்…
???????????????? pic.twitter.com/OkCfl7ZfC3— புதுவை புதல்வன் (@pondy_partner) August 26, 2020
**myck**
‘நாலு காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டாங்க’னு சம்பாரிக்க தூண்டியும் விட்டு,’
நாலு காசு வந்ததும் யாரையும் மதிக்க மாட்டாங்க’னு சொல்லிக் காட்டுறதும் ஒரே சமுதாயம் தான்..
**மயக்குநன்**
விஜயகாந்தை கிங் மேக்கராக அல்லாமல் கிங் ஆக பார்க்க தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர்!- பிரேமலதா.
இன்னும் அவரை வெச்சு செய்யணுங்கிற முடிவில்தான் இந்தம்மா இருக்கும்
**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**
ஹார்ட் அட்டாக்கும் கொரோனா அறிகுறிகளில் ஒன்று என சொல்லப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
**லாக் ஆப்**
�,”