டீ குடிக்கப் போன இடத்துல ரெண்டு தம்பிங்க சிரிச்சு பேசிக்கிட்டிருந்தாங்க. என்ன தம்பி நல்ல காமெடி மூடுல இருக்கீங்க போலிருக்கேனு சொல்லிக்கிட்டே ஜோதியில ஐக்கியமானேன். ‘ஆமாண்ணே.. தலைநகரம் காமெடி பத்தி பேசிக்கிடிருந்தோம்’னு சொன்னாங்க. தலைநகரம்னு சொன்னவுடனே விழுந்து விழுந்து சிரிச்சேன். ‘அட ஆமாப்பா….வடிவேலும் சுந்தர் சியும் பிச்சு எடுத்திருப்பாங்க. அதுலயும் வடிவேலு சொல்ற குட்டிக் கதையும், நாய் சேகர் டயலாக்கும் செமையா இருக்கும்னு’ சிரிச்சேன். அதுல ஒருத்தன் மொறைச்சிட்டு, ‘அண்ணே… நீங்க எந்த தலைநகரம் சொல்றீங்க?னு கேட்டான். வடிவேலு நடிச்ச படம்தானேனு மறுபடியும் சிரிச்சேன். அட போங்கண்ணே… வடிவேலுவை மிஞ்சி இப்ப அமைச்சர்கள் காமெடி பண்ணிக்கிட்டிருக்காங்க அதை நீங்க கேட்டதில்லையானு கேட்டு முறைச்சுக்கிட்டே சிரிச்சாங்க.
நீங்க அப்டேட்ஸ் படிங்க
**தர்மஅடி தர்மலிங்கம்**
ஒரு ரூபாய் காய்ன்ல பேசுனவங்களுக்கு தான் தெரியும் ஒரு நிமிசத்தோட மதிப்பு என்னன்னு!
மனிதர்கள் வாழ்வதர்கான அடையாளம் ????
pic.twitter.com/r74lQbZ5AF— ரவிசங்கர்® (@RavisankarBose) August 21, 2020
**சரவணன். ℳ**
என்னடா, என் பேருக்கு இ – பாஸ் வந்திருக்கு…!
அப்ளை பண்ற எல்லோருக்கும் பாஸ்ன்னா அப்படித்தான்ணே வரும்…
**Yugendar**
படித்ததில் வலித்தது!
ஒரு ரூபாய் போட்டு பேசும் போனிலிருந்து பையன் டீச்சரிடம் “ஸ்கூல் எப்ப திறக்கும்?”ன்னு கேட்டிருக்கான். அதுக்கு டீச்சர் “படிப்பு மேல அவ்வளவு ஆசையாடா?”ன்னு கேட்க. அதுக்கு அந்த பையன் “இல்ல டீச்சர் பசிக்குதுன்னு” சொல்லியிருக்கான்.
— myck (@smbsultan) August 20, 2020
**மயக்குநன்**
ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு செலவு செய்து, ‘கொரோனா போரை’ அரசு எதிர்கொண்டு வருகிறது!- அமைச்சர் பாண்டியராஜன்.
‘பாகுபலி’ பட போர்களை விட காஸ்ட்லியா இருக்கும் போலிருக்கே..?!
**Vaithianathan Subramanian**
வரும் மக்களவைத் தேர்தலில் தோனி போட்டியிடவேண்டும் -சுப்பிரமணியசுவாமி
உங்க அரசியல்”போணி” ஆகலேன்னு தோனியைக் கூப்பிடுறீங்களோ?
**உள்ளூராட்டக்காரன்**
நாளைக்கு கொழுக்கட்டை வேகுற வரைக்கும் கேஸ் நடக்கும் போல
**இந்திரா**
சிறந்த போதை எதுவென்றால், நம்மிடம் பிடித்த விஷயங்களை நமக்குப் பிடித்தவர்கள் சொல்லக் கேட்பது.
எவ்வளவு கவனமான முயற்சி???????? pic.twitter.com/wWfBgD9J50
— G.M.ANANDI (@gmuruganandi) August 21, 2020
**தர்மஅடி தர்மலிங்கம்**
அந்த காலத்து ‘ஹேண்ட்’ பாக் என்பது ஆயா வைத்திருந்த ‘சுருக்கு’ பையே!?
**Shakthivel**
ட்ராஃபிக்ல கிரீன் சிக்னல் விழுந்த உடனே பைக் ஆஃப் ஆச்சுனா தெரியும். மைக்ரா செகன்ட்டோட மதிப்பு. (ஒரு நிமிசம் பொறுங்கடா.. ஸ்டார்ட் பண்ணிகிறேன்)
இனிமேல் இந்தமாதிரி பாக்கவே முடியாதுல்ல… #MSDhoni #IndianTeam #Cricket pic.twitter.com/1jtzFLAAPq
— Rajasekar Russalayan (@RajeshSct) August 21, 2020
**தர்மஅடி தர்மலிங்கம்**
‘தமிழகத்தில் 2வது தலைநகர்’ அரசின் கருத்தல்ல – முதல்வர் பழனிசாமி.!
ஆமா! அது அரசியல் ‘வியாதி’களின் கருத்து!
**லாக் ஆஃப்**�,”