~கொரோனா வந்தவனுக்கு வந்த வாழ்வு: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

கொரோனா பாசிட்டிவ்னு சொன்னவுடனே ஹாஸ்பிட்டல்ல போய் அட்மிட் ஆனா…ஏகப்பட்ட நலம் விசாரிப்புகள். எப்படிடா தெரியும்னு கேட்டா…ஒருத்தன் போன் பண்ணி ஊரேல்லாம் இவனுக்கு கொரோனான்னு சொல்லிருக்கான். ஆனா…டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வர வரைக்கும் அவன்கிட்டே இருந்து நமக்கு ஒரு போனும் வரல.

ட்ரீட்மெண்ட் முடிஞ்சி வீட்டுக்கு வந்தாச்சு. ஒரு வாரத்துக்கு அக்கம் பக்கத்துல இருக்குற யாரும் வீட்ட விட்டு வெளிய வரலியே. ஆனா, வராதீங்கன்னு சொன்னாலும் வீட்டுக்கு வந்து கட்டிப்புடிச்சி ஆறுதல் சொல்லி, ‘உனக்கு வந்தாத்தான் அது கொரோனா, எனக்கு வந்தா அது தக்காளி சட்னி மாமேன்னுட்டு போறாங்க’ பாசக்கார நட்புக்கள். அதுலயும் சில பேரு, உனக்கு கொரோனா வரல..அங்கிருக்குற சாப்பாட்டு மெனுவ படிச்சிட்டு நீயாத்தானே அட்மிட் ஆகிட்டன்னு சொல்றானுங்க. அடேய்….உனக்கு வந்தாத்தானடா தெரியும்னு மனசுல நினைச்சிகிட்டேன்.

அப்புறம் நான் வெஜ், மீன், முட்டைனு சாப்பிட்டாத்தான் கொரோனா போகும் இல்லைனா மறுபடியும் வந்துடும்னு டாக்டர் சொல்லிருக்காருன்னு வீட்டுல சொல்ல..அப்புறம் என்ன பிரண்ட்ஸ் அன்னைக்கு இருந்து தினமும் ராஜ உபசரிப்புதான்.

நீங்க அப்டேட்ட பாருங்க…நா சாப்பாட்ட பாக்குறேன்.

**நாகராஜ சோழன் MA.MLA**

38000 சதுர கிலோ மீட்டர் சீனாக்காரன் உள்ள வர வரைக்கும் என்னய்யா பண்ணிட்டு இருந்தீங்க??

மயில் வெச்சு ஃபோட்டோ ஷூட் பண்ணிட்டு இருந்தார்….

**சரவணன். ℳ**

ஜனவரி 26 இந்தியாவுக்கு குடியரசு தினம், ஜனவரி 27 சசிகலாவுக்கு சுதந்திர தினம்

**மயக்குநன்**

அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்கும்!- அண்ணாமலை.

எந்த மாநிலம்னு சொல்லாம திறமையா சமாளிச்சிட்டேப்பா அண்ணாமலை..!

**PrabuG**

நகைக் கடையில நகை தேர்வு செய்யும் பெண்களை பார்க்கும் போதெல்லாம் தோன்றும் ஒரு விஷயம்…

பார் முழுசா சந்திரமுகியா மாறுன கங்காவை பார் டயலாக்தான்!!

**mohanram.ko**

எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன்

என்ன படிச்சிருக்க?

இன்ஜினியரிங் சார்

**கடைநிலை ஊழியன்**

நைட் லைட்ட ஆப் செய்ததும் கொஞ்ச நேரம் கண்ணு தெரியாதது போல தான் பிரச்சனைகளும்..

முதல்ல பயம் வரும் !! பிறகு தைரியம் தான வரும் !!

**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**

வீட்டிலிருந்தே தேர்வு எழுதும் மாணவர்களின் கையெழுத்து அவர்களின் முந்தைய கையெழுத்துடன் பொருந்தாவிட்டால் விடைத்தாள்கள் திருத்தப்பட மாட்டாது.

~ சென்னை பல்கலைக்கழகம்

# இருந்தாலும் கடலைமுத்து ரொம்ப ஸ்டிரிக்ட்டுப்பா..

**மயக்குநன்**

சூர்யா போன்ற கூத்தாடிகள் நீட் பற்றி பேச கூடாது!- எஸ்.வி.சேகர்.

ஆத்தாடி… நாசா சயின்டிஸ்ட் சொல்றாரு..!

**மித்ரன்**

சூர்யா பாஜகவில் இணைந்தால் நிறைய சாதிக்கலாம் – பாபு கணேஷ், பாஜக #

அவர் தான் ஏற்கனவே சொல்லிட்டாரே! “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரைன்னு” கொஞ்சங்கூட வெட்கமே இல்ல..?!

**லாக் ஆப்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share