கொரோனா மூன்றாம் அலை வருது, இரண்டாம் அலை இருக்குனு கரடியா கத்திக்கிட்டிருந்தாலும் யாரும் காதுல வாங்கிக்கிற மாதிரி தெரியலை. எங்க பாத்தாலும் மூன்றாவது அலையை வரவேற்கத் திரண்ட மாதிரி கூட்டம். இந்த நேரத்துல திருச்சியில ஒரு ஜவுளிக் கடையில செஞ்சிருக்கிற விஷயம் ரொம்ப பாராட்டுற மாதிரி இருக்குங்க. வாக்சின் போட்டுகிட்டு வந்து அந்த ஆதாரத்தைக் காமிச்சா முதல் டோஸுக்கு தனியா பத்து பர்சன்ட் தள்ளுபடி, ரெண்டு டோஸும் போட்டுக்கிட்டா இருபது பர்சன்ட் தள்ளூபடினு அறிவிச்சிருக்காங்க. ரொம்ப நல்ல விசயம்… துணிய வித்த மாதிரியும் ஆச்சு, வாக்சின் விழிப்புணர்வு மாதிரியும் ஆச்சு. மாநாடு ரேஞ்சுக்கு கூட்டம் கூட்டுற ஜவுளிக் கடை முதலாளிகளா கொஞ்சம் இதைப் பாருங்களேன்…
நீங்க அப்டேட் பாருங்க
**amudu**
சசிகலா யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை. -எடப்பாடி பழனிச்சாமி.
அப்போ.. கூவத்தூர் பிளானெல்லாம் உங்களோடது தானா.!?
**மயக்குநன்**
ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லையா? பொய் சொல்லும் மத்திய அரசு மீது வழக்கு தொடர வேண்டும்!- சிவசேனா.
அப்ப… டெய்லி பத்து, பதினஞ்சு வழக்கு தொடர வேண்டியிருக்கும்… ஓகே-வா..?!
**நாகராஜசோழன்.MA.MLA.**
சிக்னல் கிடைக்காத அவலம்: தண்ணீர் டேங்க் மீது ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்குபெறும் மாணவர்கள்
இந்த லட்சணத்தில் சிட்டி சைடுல நீட் கோச்சிங் செண்டர்ல படிச்சு இருக்கும் மாணவர்களோட போட்டி போட்டு நீட் exam எழுதி வில்லேஜ் மாணவர்கள் பாஸ் பண்ணிட்டாலும்….
**amudu**
தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை. -கமல்.
இதில் “கமல் தமிழ்” என்ற ஆய்வு துறையையும் உருவாக்கணும்.
**balebalu**
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தனக்கு தெரியாது!- தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா.
இப்படி ஒரு நடிகர் இருக்காரா ? எங்களுக்கு தெரியாதே
**ச ப் பா ணி**
கார்,பைக்கிற்கு அப்புறம் சைக்கிள் வாங்குவது தற்போது
நாகரிக அடையாளமாகிவிட்டது
**PrabuG**
மறந்து போய் மாஸ்க் போடாம வெளியே வந்தா, சட்டை போடாம வெளியே வந்துட்ட மாதிரி ஒரே ஷையா இருக்கு..????????
-WearAMask
**மயக்குநன்**
செல்போன் ஒட்டுக்கேட்பு விஷயத்திற்காக ‘நீதி விசாரணை’ தேவையற்றது!- அண்ணாமலை.
ஏன்… ‘பீதி’ விசாரணையா மாறிடுமோனு பயப்படறீங்களோ..?!
**mohanram.ko**
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை ~
சோதனை மேல் ‘சோதனை’
**கடைநிலை ஊழியன்**
ஜி, whatsapp backup எடுக்க மறந்துட்டேன்.. புது போன் மாத்திட்டேன்.. அந்த audio backup மட்டும் தர முடியுமா ??
**செங்காந்தள்**
ஓட்டுக் கேட்பதும்,
ஒட்டுக் கேட்பதும்
அரசியலின் இரு கண்கள்…!!!
**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**
கிரெடிட்/டெபிட் கார்டு யூஸ் பண்ணம, எல்லா செலவும் பர்ஸ்ல இருந்து Cash எடுத்து செலவு பண்ணாலே, சிக்கனம் தானா வந்துரும்.
**மயக்குநன்**
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு!- சசிகலா தரப்பில் பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்.
பதிலையும் ஆடியோவாதான் ரிலீஸ் பண்ணுவாங்களோ..?!
**கோழியின் கிறுக்கல்**
அம்மா என்பவர் ‘Snooze’ இல்லாத அலாரம்!!
**-லாக் ஆப்**
�,”