மெஹ்ரீனின் ஹோட்டல் பில்லும், பெண்கள் பாதுகாப்பும்…?

entertainment

நடிகைகள், செய்திகளில் இடம்பெறுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், கடந்த வாரம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்றிருக்கும் அஸ்வத்தமா திரைப்படத்தின் ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சாடா கடந்த இரண்டு நாட்களாக செய்திகளில் காணப்பட்ட காரணம் வித்தியாசமான ஒன்று.

“ஹோட்டல் பில்லை கட்டாமல், அவரது மேக்-அப் ஆர்ட்டிஸ்டுக்கு பணம் கட்டாமல் மெஹ்ரீன் ஓடிவிட்டார்” என்று தயாரிப்பு தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்கள் எல்லா இடங்களிலும் பரவியது. படம் ரிலீஸாகி முதல் வாரம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடும் வரை அமைதிகாத்த மெஹ்ரீன் இப்போது தனது தரப்பு நியாயத்தை தெரிவித்திருக்கிறார்.

“சமீபகாலமாக என்னைப்பற்றி வெளியாகும் செய்திகளால் நான் மிகவும் உடைந்துபோயிருக்கிறேன். இப்போதுகூட நான் திரையுலகில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பெயர் வீணாகிப்போவதாலேயே நான் முன்வந்து பேசுகிறேன். சங்கராந்தி ரிலீஸுக்குப் பிறகு நான் பஞ்சாபிலுள்ள என் குடும்பத்தைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து நேராக ஹைதராபாத் வந்தேன். இங்கு நான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தபோது என் தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. அப்போதும் எனக்கு பட புரமோஷன் முக்கியமாகத் தோன்றியது. என் வலிகளை மறைத்துக்கொண்டு நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்து என்னுடன் அஸ்வத்தமாவில் நடித்த நாக ஷௌரியா குறிப்பிட்டிருந்தார். இப்படியெல்லாம் கலந்துகொண்ட நான், சில நாட்களில் ஸ்கின் அலெர்ஜியால் பாதிக்கப்பட்டேன். என் முகத்தை வெளிக்காட்டவே முடியாத நிலை ஏற்பட்டதால் என்னால் நிகழ்ச்சிகளுக்கு வரமுடியாமல் போனது. அதன்பின் நான் அங்கிருந்து புறப்பட முயற்சித்தபோது என் ஹோட்டல் பில்லையும், என் மேக்-அப் ஆர்ட்டிஸ்ட்டுக்கான பணத்தையும் செட்டில் செய்ய புரொடக்‌ஷன் டீம் மறுத்தது. அதன்பின் என் மேனேஜரிடம் சொல்லி இந்த செட்டில்மெண்ட்களை என் பணத்திலிருந்தே கொடுக்கச் சொன்னேன். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு ஹோட்டல் பில் கட்டாமல் ஓடிவிட்ட நடிகை என இண்டஸ்ட்ரியில் என் பெயரைக் கெடுக்கும் விதத்தில் தகவல்களைப் பரவச் செய்து என்னுடைய மார்க்கெட்டை வீழ்த்த நினைத்தது விரும்பத்தகாத செயல். இதுவரை நான் நடித்த 14 திரைப்படங்களில் நான் எந்த புரொடக்‌ஷன் டீமுடனும் பிரச்சினையில் ஈடுபட்டதில்லை. என்னுடைய சந்தேகமெல்லாம், அஸ்வத்தமா போல பெண்களின் உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம் ஆகியவற்றைப் பேசும் படத்தை ஒரு பக்கம் தயாரித்துவிட்டு, இன்னொரு பக்கம் ஒரு நடிகையின் வாழ்க்கையை சேற்றில் போட்டு மிதிக்கவும் எப்படித் தோன்றுகிறது என்பது தான்” என மிக நீண்ட விளக்கக் கடிதத்தில் கூறியிருக்கிறார் மெஹ்ரீன்.

நடிகர்கள், நடிகைகள் தங்களது திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வராதது மிகப்பெரிய பிரச்சினையாக எல்லா சினிமாக்களிலும் இருக்கிறது. பாலிவுட், மலையாள சினிமாக்கள் இதற்கு ஒருவித தீர்வினை கண்டுவிட்டாலும் தெலுங்கு சினிமாவில் இதுபோல மிரட்டுவதும், தமிழ் சினிமாவில் நடிகர்கள் நடிகைகளிடம் கெஞ்சுவதும் வழக்கமாக நடைபெற்றுவருகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *