Zபொங்கலுக்கு முன்பேகூட ‘மாஸ்டர்’!

Published On:

| By Balaji

திரையரங்குகள் திறக்கப்படாததால் ‘மாஸ்டர்’ படம் ஓடிடி-யில் வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை மாஸ்டர் படக்குழுவினர் மறுத்துள்ளனர். பொங்கலுக்கு முன்பேகூட ‘மாஸ்டர்’ தியேட்டரில் வெளியாகலாம் என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படுகின்றன. ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’ தொடங்கி நிறைய தமிழ்ப் படங்கள் இதுவரை ஓடிடி-யில் ரிலீஸாகியுள்ளன.

தற்போது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, விஜய் சேதுபதியின் ‘க.பெ.ரணசிங்கம்’ போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகவும், அமேசானுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என்ற நிலையில், இதுவரை இதுபோல் பல நூறு முறை சொல்லிவிட்டார்கள். நாங்களும் பலமுறை தெளிவுபடுத்திவிட்டோம். படம் நிச்சயம் தியேட்டரில்தான் ரிலீஸாகும். அமேசானுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். ‘மாஸ்டர்’ படத்தை ரசிகர்கள் விரைவில் தியேட்டரில் பார்க்கலாம். அது இந்த ஆண்டே கூட நடக்கலாம். தியேட்டர்கள் எப்போது திறந்தாலும் ‘மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் ரெடி” என்கிறார்கள் ‘மாஸ்டர்’ டீம்.

ஆக, பொங்கலுக்கு முன்பேகூட ‘மாஸ்டர்’ ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**ராஜ்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment