மாஸ்டர் தயாரிப்பாளருக்கு புது சிக்கல்? கோப்ரா இயக்குநரால் வந்த சோதனை!

entertainment

விக்ரம் நடிப்பில் 2015ல் ‘ஐ’ மற்றும் ‘10 எண்றதுக்குள்ள’, 2016ல்‘இருமுகன்’, 2018ல் ‘ஸ்கெட்ச்’,‘சாமி 2’ இறுதியாக, 2019ல் ‘கடாரம் கொண்டான்’ படங்கள் வெளியானது. சோகம் என்னவென்றால், விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான அத்தனைப் படங்களுமே பெரிதாக வெற்றியைத் தரவில்லை. தொடர்ச்சியாக தோல்விப் படங்களைக் கொடுத்துவிட்டதால், விக்ரமின் பெரிய நம்பிக்கை தீபமாக இருப்பது கோப்ரா படம் தான்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், இர்ஃபான் கான், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவருகிறது கோப்ரா. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார். மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் வசூலால் மகிழ்ச்சியாக இருப்பவர், கோப்ரா இயக்குநரால் பெரும் மனஉளைச்சலில் இருக்கிறாராம். கோப்ரா படம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டாலும், பல சிக்கல்களைச் சந்தித்திருக்கிறதாகச் சொல்லப்படுகிறது.

இயக்குநர் சொன்ன பட்ஜெட்டை விட படம் உருவாவதில் அதிக செலவு ஆகியிருக்கிறது. ஒரு பக்கம் கொரோனாவினால் பெரிய செலவு என்றாலும், இயக்குநரின் சரியான திட்டமிடல் இல்லாததும் காரணம் என்று சொல்கிறார்கள். அதை உணர்ந்து இயக்குநரும் சம்பளத்திலிருந்து ஒன்றரை கோடி விட்டுக் கொடுத்திருக்கிறாராம். இதன்பிறகு, இறுதிக்கட்டமாக 35 நாட்கள் படப்பிடிப்பு மீதமிருப்பதாக இயக்குநர் கூறியிருக்கிறார். அப்படி தான், கொல்கத்தா ஷூட்டிங் துவங்கி நடந்துவந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் படப்பிடிப்பும் நடந்துமுடிந்திருக்கிறது.

இப்போது, இன்னும் ஒரு மாதம் படப்பிடிப்புக்கு ஆகும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இதனால் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டாராம் மாஸ்டர் இணை தயாரிப்பாளர் லலித். இதற்கு காரணமும் இருக்கிறது. சொன்ன கால்ஷீட்டில் படம் முடியாததால், விக்ரம் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டாராம். படத்தில் நடித்துவந்த கே.எஸ்.ரவிக்குமார், படத்தின் நாயகி இருவருமே அடுத்தடுத்த படங்களுக்கு சென்றுவிட்டார்கள். மீண்டும் கால்ஷீட் வாங்குவதில் பெரிய சிக்கல் நிலவுகிறதாம். இவர்களிடமெல்லாம் கால்ஷீட் வாங்கி, மீண்டும் படம் துவங்குவதற்கு மாதங்கள் பிடிக்கும்.

இப்படியான பெரிய சிக்கலுக்குள் லலித்குமாரை கொண்டு வந்துவிட்டதால் கோப்ரா இயக்குநர் மீது டென்ஷனாகிவிட்டாராம் லலித். இந்த சிக்கலையெல்லாம் தாண்டி கோப்ரா உருவாவது எப்படி என்று தயாரிப்பாளருக்கும் தெரியவில்லை. இயக்குநருக்கும் புரியவில்லை.

**ஆதினி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0