மாநாடு அளவில் எதிர்பார்க்கப்பட்ட விஜயின் மாஸ்டர் பட ஆடியோ ரிலீஸ், இன்று (மார்ச் 15) ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு புதிய கெட்டப்பில் விஜய் வந்தபோது அரங்கமே அதிர்ந்தது. புதிய கெட்டப்பில் வந்திருந்தாலும் வழக்கத்தை விட இறுக்கமான முகத்தோடே இருந்தார். ஆனாலும் இந்த இறுக்கத்தை உடைத்து, விஜய்யின் முகத்தில் புன்னகையை மட்டுமல்ல சிரிப்பையும் வர வைத்தார் தினா.
விஜய் டிவி ஷோக்களில் கலாய்த்தலுக்கு புகழ் பெற்ற தினா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் அவரது முந்தைய படமான கைதியில் அறிமுகமானவர். மாஸ்டர் படத்திலும் தினா நடித்திருக்கிறார்.
தினா மேடையில் பேசும்போது வழக்கம்போல் ஒவ்வொருவராய் கலாய்த்துத் தள்ளிக் கொண்டிருந்தார். தன்னையும் தினா கலாய்ப்பார் என்று விஜயே இறுக்கமுடன் காத்திருந்த நிலையில்,
“இளைஞர்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன். எல்லார்கிட்டையும் பைக் இருக்கு. வேகமாகவும் போகத் தெரியும். ஈசிஆர் ரோடு ஃப்ரியா இருக்குனு அடிக்கடி அங்க ரைடு போகாதீங்க’ என்று தினா சொன்னதும் அரங்கமே கைதட்டியது. அப்போதுதான் விஜய்யும் இறுக்கத்தை உடைத்து லேசாகச் சிரித்தார். தினா மீண்டும், ‘நான் சொல்றது இளைஞர்களின் பைக் ரைடைதான்” என்றும் சொல்ல மேலும் கலகலப்பு.
மாஸ்டர் படப்பிடிப்பின் போது நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய்யை அழைத்துச் சென்ற வருமான வரித்துறையினர் பின் விஜயின் ஈசிஆர் வீட்டில் ரெய்டு நடத்தினர். ஓரிரு நாள் முன் மீண்டும் விஜயின் ஈசிஆர் வீட்டுக்குச் சென்றனர் ஐடி துறையினர்.
இதையெல்லாம் மனதில் வைத்துதான் மாஸ்டர் ஆடியோ லாஞ்ச்சில் வருமான வரித்துறையை தினா கலாய்க்க, அதை உள்ளூர ரசித்தார் விஜய்.
**-வேந்தன்**�,