kமஹா சமுத்ரம் ஓடிடியில் வெளியிடுவது ஏன்?

Published On:

| By Balaji

}

தமிழ், தெலுங்கில் தயாரான ஒரு படம் தெலுங்கில் படு தோல்வியை சந்தித்ததால் தமிழில் நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போகிறது.

சித்தார்த், ஷர்வானந்த் நடிப்பில் அதிதி ராவ் ஹைதிரி, அனு இம்மானுவேல் ஆகியோரின் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவானது ‘மஹா சமுத்ரம்’ திரைப்படம்.

இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பு கொரோனாவின் இரண்டாம் கட்ட பொது முடக்கத்துக்குப்பின் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியானது.

ஆனால், படம் வணிக ரீதியாக படு தோல்வியடைந்தது. தற்போது இந்தப் படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகக் காத்துக்கொண்டிருந்தது. சித்தார்த் நடித்திருந்ததால் தமிழுக்கும் கொண்டு வர வேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்திருந்தார்.

ஆனால், கடைசியில் தெலுங்கில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தமிழிலும் வெளியிட்டு தோல்வி ஏற்பட்டால் மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் நேரடியாக ஓடிடியில் வெளியிடுவது என முடிவு எடுத்திருக்கிறார்கள்

அதன் காரணமாகவே மஹா சமுத்ரம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share