யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் இந்தியாவுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்தது அனைவரும் அறிந்த விஷயம்.
மற்றொரு மகிழ்ச்சியான விஷயமும் யோகிபாபுவுக்குக் கிடைத்திருக்கிறது. அது, அவர் நடித்திருக்கும் படமான ‘மீன் குழம்பு’ படத்திற்கு வெளிநாட்டு திரைப்பட விழாவில் விருது கிடைத்திருப்பதுதான்.
இத்திரைப்படத்தை சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படத்தின் இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் திரைக்கதை ‘சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை’ என்ற விருதை பிர்சமுண்டா இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் வென்றுள்ளது.
இந்த விருதினை படத்தின் இயக்குநர் யோகிபாபுவிடம் காண்பித்து வெற்றியையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.
வெறுமனே காமெடியனாகவும் இல்லாமல் இது போன்று கதையம்சம் கொண்ட படங்களிலும் இருந்து தனது இருப்பை தமிழ்ச் சினிமாவில் வித்தியாசப்படுத்துகிறார் யோகிபாபு.
**-அம்பலவாணன்**
�,