அக்டோபர் 2ஆம் தேதி ‘சைலன்ஸ்’ படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ள நிலையில், படத்தின் நாயகி நடிகை அனுஷ்கா படம் குறித்து எந்தவித பேட்டியும் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட நடிகை அனுஷ்கா, ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது வேறு வழியின்றி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் சம்மதித்தார்.
படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற நடிகர்கள் இதில் கலந்துகொண்டு படம் பற்றி பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால், அனுஷ்கா இதுவரை எந்தப் பேட்டியும் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
முன்னதாக தனது தரப்பில் ஒரே ஒரு வீடியோவை எடுத்துத் தருவதாகவும், அதையே அனைத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அனுஷ்கா சொல்லியிருந்தாராம். படம் ரிலீஸாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அந்த வீடியோவும் இன்னும் வராததால் படக்குழு குழப்பத்தில் உள்ளார்களாம். படத்தை ஓடிடியில் வெளியிடுவது பிடிக்காமல் தான் அனுஷ்கா இப்படி செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
மேலும், ‘சைலன்ஸ்’ படத்துடன் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ. ரணசிங்கம் படமும் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
**-ராஜ்**�,