தமிழில் லெஸ்பியன் படம்!

entertainment

M

ஆங்கிலப் படங்களில்தான் லெஸ்பியன் சம்பந்தமான கதைகள் அதிகமாக வெளிவரும். தற்போது தமிழிலும் வெளிவரத் தொடங்கியுள்ள அந்த வகையான கதையில் தயாராகி உள்ள படம் ‘அந்தகா’.

கந்தா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதுமுகங்களை வைத்து இயக்குநர் ஜேம்ஸ் கிரண்.ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ரியாஸ், மனோஜ், ஜேம்ஸ் கிரண், ஆஷிகா, ஜெனிபர் ரேச்சல், பூஜா ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செந்தமிழ் இசையமைத்துள்ளார். பிரசாந்த் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் ஜேம்ஸ் கிரணே ஹீரோ மற்றும் வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் கிரண்.ஜி பேசுகையில், “அந்தகா என்றால் சமஸ்கிருதத்தில் இருளின் அரசன் என்று பொருள். ஒரு சராசரியான நபராக இருக்கும் மனிதன், தான் விரும்பிய சிறிய விஷயங்களைகூட அடைய முடியாதபோது, அதை அடைய, எதையும் செய்யலாம் என்று முயற்சி செய்கிறான். அதன் விளைவு சைக்கோவாக மாறுகிறான். அப்படியான ஒரு மனிதனின் கதைதான் இந்தப் படம்.

இந்தப் படத்தில் வில்லன் இருட்டிலேயே இருப்பார். ஹாரர், காமெடி பாணியில் பயணிக்கும் இந்தப் படம் ஒரு சைக்கோ த்ரில்லராக இருக்கும். இவற்றின் ஊடாக ஒரு லெஸ்பியன் தம்பதியின் கதையும் இருக்கிறது. அதன் வாயிலாக லெஸ்பியன் பெண்களின் உணர்வுகளையும் படத்தில் பேசி இருக்கிறோம்” என்றார்.

சென்னையின் ஈ.சி.ஆர் பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

**-இராமானுஜம்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *