வடிவேலுவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி: லாரன்ஸ்

Published On:

| By admin

‘சந்திரமுகி 2’ படம் குறித்தும், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடிப்பது பற்றியும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் ‘சந்திரமுகி 2’ படம் வெளியானது. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து, இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்து அறிவிப்பு நேற்று மாலை வெளியாகி இருந்தது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இவருடன் வடிவேலும் இணைந்து நடிக்கிறார். படத்திற்கு இசை கீரவாணி. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் வடிவேலுவுடன் இணைந்து நடிப்பது பற்றியும் ‘சந்திரமுகி 2’ படம் பற்றியும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ” என்னுடைய அடுத்த ப்ராஜக்ட் ‘சந்திரமுகி 2’ என்று அறிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. வடிவேலு அண்ணனுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. என்னுடைய குருவான நடிகர் ரஜினிகாந்த் சாருக்கு இந்த சமயத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த டைட்டிலை கொடுத்த சிவாஜி ப்ரொடக்ஷன்ஸுக்கு நன்றி. லைகா புரொடக்சன் உடன் இணைந்து பணியாற்றுகிறேன்” என்று கூறியுள்ளார்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share