1983 ஆம் ஆண்டு வெளியாகி நகரம் முதல் குக்கிராமம் வரை வெற்றி பெற்ற படம் ‘முந்தானை முடிச்சு’.
பாக்யராஜ் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்திருந்தார். ஊர்வசி இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்படத்தின் வசனங்களும் பாடல்களும் இன்று வரை மிகவும் பிரபலம். இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் அதே இயக்குநரின் இயக்கத்தில் மீண்டும் உருவாகவிருக்கிறது.
ஆனால் இம்முறை கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் சசிகுமார். அவருக்கேற்பவும் இன்றைய சூழலுக்கு ஏற்ப திரைக்கதையில் சிற்சில மாற்றங்களை செய்திருக்கிறாராம் பாக்யராஜ்.
இப்படத்தை அசுரகுரு படத்தைத் தயாரித்த ஜே .எஸ்.பி. சதீஷ் தயாரிக்கவிருக்கிறார்.
வெவ்வேறு திரைக்கதை வடிவங்களில் இயக்குநர்களாக வெற்றி கண்ட பாக்யராஜ், சசிகுமார் கூட்டணியில் தயாராக இருக்கும் ‘முந்தானை முடிச்சு’ எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
**-இராமானுஜம்**�,