பாலிவுட் திரை உலகுடன் ஒப்பிடும்பொழுது தென்னிந்திய திரையுலகமே சிறந்தது என்று பிரபல நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார் .
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துவருபவர் நடிகை பாயல் கோஷ். தமிழில் அவர் 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘தேரோடும் வீதியிலே’என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதற்குப் பின்னர் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தென்னிந்திய சினிமா குறித்தும், திரையுலகினர் குறித்தும் சில பெண்கள் தவறாக பேசி வருவதற்கு பாயல் கோஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் **”சில பெண்கள் தென்னிந்திய திரையுலகைப் பற்றி தவறாக பேசுவதை நான் பார்த்து வருகிறேன். அவர்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.**
**பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமா மிகவும் சிறந்தது. தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள் அனைவரும் அற்புதமானவர்கள். அங்கு இருக்கும் ரசிகர்களும், பார்வையாளர்களும் அப்படி தான். தென்னிந்திய சினிமாவால் பாலிவுட்டுடன் போட்டி போட இயலும். தென்னிந்திய சினிமா மிகவும் பெரியது. தென்னிந்திய படங்களை ரீமேக் செய்ய பாலிவுட் காத்திருக்கிறது”** என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”