சாமியை யார்‌ காப்பாற்றுவார்? இயக்குநர் மோகன் ராஜா கேள்வி!

entertainment

நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரும் பிரபல இயக்குநருமான மோகன் ராஜா, அவருடைய மூன்று வயது மகள் கடவுளைப் பற்றி அவரிடம் கேட்ட கேள்வி குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

‘ஜெயம்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘உனக்கும் எனக்கும்’, ‘வேலாயுதம்’, ‘தனி ஒருவன்’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் மோகன் ராஜா . அவர் தற்போது ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாக வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவருடைய மகள் கேட்ட வித்தியாசமான கேள்வி ஒன்று குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#கந்தனுக்கு_அரோகரா

— Kanesh – BRUNO (@KaneshBruno) July 22, 2020

அவர் தனது பதிவில் **“அன்று, மூன்று வயது நிரம்பிய என்‌ மகளுக்கு சாமி கும்பிட கற்றுக்கொடுத்தோம்‌. கடவுளைப் பார்த்து இரு கரம்‌ கூப்பி, ‘அம்மா நல்லா இருக்கணும்‌, அப்பா நல்லா இருக்கணும்‌, எல்லாரும்‌ நல்லா இருக்கணும்னு வேண்டிக்கம்மா என்றோம்‌. அவளும்‌ சொல்லிக் கொடுத்தது போலே அம்மா நல்லா இருக்கணும்‌, அப்பா நல்லா இருக்கணும்‌, தாத்தா நல்லா இருக்கணும்‌, பாட்டி நல்லா இருக்கணும்‌, அத்தை மாமா நல்லா இருக்கணும்‌, சித்தப்பா நல்லா இருக்கணும்‌’ என கூறி தொடர்ச்சியாகச் சொல்லாத ஒன்றையும்‌ கூறினாள்.‌ ‘சாமி நல்லா இருக்கணும்’‌. சரி தானே! நம்மைக் காப்பாற்ற சாமி இருக்கு. நம்மிடமிருந்து சாமியைக் காப்பாற்ற யார்‌ இருக்கா?”** என்று கேட்டுள்ளார்.

கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிடப்பட்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அதுகுறித்து கண்டனக் குரல்கள் எழுப்பி வருகின்றனர். இந்தச் சூழலில் மோகன் ராஜா இந்தப் பதிவை வெளியிட்டுள்ளதால் ரசிகர்களில் சிலர், ‘தமிழகத்தில் நிலவிவரும் சமகால பிரச்சினைகளைக் குறிப்பிடும் விதமாகக் குழந்தை எழுப்பிய கேள்வியும் உள்ளதே?’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *