அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்து வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தைப் பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து கடந்த காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டவர்கள் முதன்மை வேடத்தில் நடித்திருந்த இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற இத்திரைப்படம் வசூலிலும் சாதனை புரிந்தது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் ‘ஓ மை கடவுளே’ படத்தைப் பார்த்த நடிகர் மகேஷ் பாபு படக்குழுவினரைப் பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ** “ஓ மை கடவுளே படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து ரசித்தேன். சிறப்பான நடிப்பு, அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை புத்திசாலித்தனமாக எழுதி இயக்கியுள்ளார். அசோக் செல்வன் நீங்கள் ஒரு இயல்பான நடிகர்”** என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
#OhMyKadavule… Enjoyed every bit of it… Superb performances, brilliantly written and directed @Dir_Ashwath. ????????????@AshokSelvan you’re a natural???????????? pic.twitter.com/Ozxlz0EP4Q
— Mahesh Babu (@urstrulyMahesh) July 18, 2020
மகேஷ் பாவுவின் இந்த பாராட்டு ட்வீட்டைப் பார்த்த ‘ஓ மை கடவுளே’ படக்குழுவினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். அத்துடன் ட்விட்டர் பதிவுகளின் மூலமாக தங்கள் மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “சார்ர்ர்ர்!!! ஓ மை கடவுளே! நீங்கள் இந்த நாளை இனிமையாக்கிவிட்டீர்கள்…உங்கள் ரசிகனான எனக்கு உங்களிடமிருந்து இது போன்ற வார்த்தைகள் கிடைப்பது….என்னை வார்த்தையற்றவன் ஆக்கிவிட்டது.” என்று கூறியுள்ளார்.
நடிகர் அசோக் செல்வன், “நிச்சயமாக இதுதான் என்னுடைய ‘ஓ மை கடவுளே’ தருணம். மிக்க நன்றி சார். நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். நான் இங்கே நிஜமாகவே நடனமாடிக் கொண்டிருக்கிறேன்.” என்று பதிவிட்டு தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே போன்று படத்தின் கதாநாயகி ரித்திகா சிங், ‘கடவுளே. இது உண்மையா? மிக்க நன்றி சார். உங்களிடமிருந்து பாராட்டு கிடைப்பது மிகப்பெரிய விஷயம். என்னவொரு நாள்!!!’ என்று பதிவிட்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”