gபிரபாஸுடன் ஜோடி சேரும் தீபிகா படுகோன்

entertainment

பிரபாஸ் கதாநாயகனாகும் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அவருடன் ஜோடி சேரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலமாக இந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலமடைந்த நடிகர் பிரபாஸ் அடுத்ததாக ‘ராதே ஷ்யாம்’ என்னும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபாஸின் 21 ஆவது திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது. தங்களது 50 ஆவது ஆண்டு நிறைவை ‘வைஜெயந்தி மூவிஸ்’ நிறுவனம் கொண்டாடி வரும் நிலையில் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Deepika Padukone, welcome on board! Thrilled to have you be a part of this incredible adventure. #Prabhas @deepikapadukone @nagashwin7#Prabhas21 #DeepikaPrabhas pic.twitter.com/PLdgPT6igz

— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 19, 2020

கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்த ‘மஹாநடி’ திரைப்படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் இந்தத் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இன்று(ஜூலை 19) காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், பிரபாஸ் – நாக் அஷ்வின் இணையும் இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் என்று அறிவித்துள்ளனர்.

மேக்னா குல்சார் இயக்கத்தில் ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா நடித்த ‘சாப்பக்’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் கபீர் கான் இயக்கத்தில் கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து 83 படத்தில் நடித்துள்ளார். 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையகருவாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் பிரபாஸுடன் அவர் ஜோடி சேரவிருக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்து ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *