வீழ்வேனென்று நினைத்தாயோ? நான் சென்னை: நம்பிக்கை வீடியோ!

entertainment

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.

தினந்தோறும் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பாலும், நூறு நாட்களைக் கடந்து அமலில் இருக்கும் ஊரடங்கின் காரணமாகவும் சென்னை மக்களில் பலரும் சோர்ந்து போயுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ‘நான் சென்னை’ என்ற கவிதை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

‘சென்னை தன்னைப்பற்றி என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதை இது’ என்று குறிப்பிட்டு இயக்குநர் பார்த்திபனின் குரலில் அமைந்துள்ள அந்த கவிதை,

*தடைகள் ஆயிரம் தகர்த்தவன்*

*படைகள் ஆயிரம் பார்த்தவன்*

*பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன்*

*பேரலையைக் கண்டவன், பேரிடரும் கண்டவன்*

*பெயர் மாறி, உரு மாறி வலுவானவன்,*

*எதுவந்த போதிலும் நிறம் மாறாதவன்*

*வந்தவர் எத்தனை, போனவர் எத்தனை*

*கண்டது எத்தனை, கொண்டது எத்தனை*

*என் பலம் எனதல்ல, என்னில் இரண்டற கலந்து வாழும்*

*என் மக்களே என் பலம்!*

*நீரால், நெருப்பால், காற்றால், நிலத்தால்*

*எவ்வழி இடர் வரினும், தளர்வரினும்*

*என் கரம் இறுகப் பற்றும் என் மக்களே என் பலம்!*

*என் மக்கள், மனதில் தன்னம்பிக்கை அணிந்துகொண்டு*

*முகத்தில் கவசம் அணிந்து சமூக விலகலோடு,*

*இன்றைக்கும் என்றைக்கும் எனக்குத் தோள் கொடுப்பர்*

*வீழ்வேனென்று நினைத்தாயோ!*

*மீண்டு வருவேன்! நான்சென்னை!*

என்ற வரிகளுடன் சென்னையே தன்னைப் பற்றியும், தான் நேசிக்கும் தனது மக்களைப் பற்றியும் பேசுவதாக அமைந்துள்ளது.

கொரோனாவுக்கே சாவுமணி. சென்னைக்கோ ஆலயமணி ,
வாழ்த்துக்கு மாண்புமிகு வேலுமணி ! உளப்பூர்வ பங்களிப்பே என் பணி https://t.co/feRPXGHh3P

— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 6, 2020

இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,** “பேரிடர்கள் வென்ற சாதனை மைல்கற்களே என் வரலாறு. ஆயிரமாயிரம் களப்பணியாளர்கள் அரசின் முயற்சிகளோடு இணைந்து, முகக்கவசம் அணிந்து, சமூக விலகல் கடைபிடித்து, தற்காத்து இம்முறையும் இடர் வெல்வேன். மீண்டும், மீண்டு வருவேன்! வீழ்வேனென்று நினைத்தாயோ? நான் சென்னை”** என்று சென்னை தன்னைப் பற்றிக் கூறுவதாக நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப்பதிவைப் பகிர்ந்த இயக்குநர் பார்த்திபன், **‘கொரோனாவுக்கே சாவுமணி. சென்னைக்கோ ஆலயமணி. வாழ்த்துக்கு மாண்புமிகு வேலுமணி ! உளப்பூர்வ பங்களிப்பே என் பணி’** என்று கூறியுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0