கொரோனா வைரஸ் பிரச்னையால், தேசிய ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சினிமா பிரபலங்கள், தங்கள் கைபேசியிலேயே குறும்படங்கள் எடுத்து வருகின்றனர்.
இயக்குநர் கெளதம் மேனன், சிம்பு, த்ரிஷா ஆகியோரை வைத்து ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படத்தை எடுத்திருக்கிறார். அதன் டீசர் அண்மையில் வெளியானது.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ஒரு குறும்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் நடிகை ஸ்ரீபிரியாவும், கமீலா நாசரும் இணைந்து கைபேசியிலேயே உருவாக்கியிருக்கும் ‘யசோதா’ எனும் குறும்படத்தின் முதல் பார்வை இடம்பெற்றிருக்கிறது.
அக்குறும்படத்தில் சிவாஜி பேரன் சிவக்குமார் மற்றும் நாசர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
*படத்தொகுப்பு :ரூபன் *
*இசை: க்ரிஷ்*
*பாடல்கள்: நித்யா பிள்ளை*
தினந்தோறும் எண்ணற்ற குறும்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் கமல் வெளியிட்டதால் ‘யசோதா’ குறும்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது எனக் கூறுகிறார்கள். சினிமாவில் புதிய முயற்சிகளை எதிர் விளைவுகள், இழப்புகளைப் பற்றி கவலைப்படாமல் மேற்கொள்வது இயல்பானது.
புதுமை விரும்பிகளின் எண்ணத்துடிப்பை வெளிப்படுத்தும் கெளதம் மேனன் போன்றோரின் செயலால் கைபேசி மூலம் உருவாகியிருக்கும் இக்குறும்படங்கள் சினிமா தயாரிப்பில் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**-இராமானுஜம்**�,”