ரூ.2.90 லட்சம் விலையில் தங்க மாஸ்க்: அதிர வைத்த இந்தியர்!

Published On:

| By Balaji

புனே மாநிலத்தை சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் 2.90 லட்ச ரூபாய் விலை மதிப்பு கொண்ட தங்க மாஸ்க் அணிந்து வலம் வருவது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாஸ்க் அணியாமல் வெளியே வருவது விதிமீறல், அவ்வாறு செய்தால் அபராதம் விதிக்கப்படும், தண்டனை அளிக்கப்படும் என்றெல்லாம் தொடர்ந்து அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாமல் வெளியே செல்வது வைரஸ் தொற்று ஏற்பட நாமே வழி அமைத்துக் கொடுப்பது போன்றது என்பதாலேயே நம் நலனில் அக்கறை கொண்டு இந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் கிருமிகள் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக முகம் மற்றும் மூக்கை மூடும் வகையில் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆனால், உயிர்காக்கும் கவசமான மாஸ்க் இப்போது பல நிறங்களிலும், பல வடிவங்களிலும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாஸ்க் வாங்க முடியாத சிலர் கைக்குட்டை, சிறிய துணி, துப்பட்டா போன்றவற்றையும் முகத்தை மூடப் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் மூலிகை மாஸ்க், மட்கும் மாஸ்க் என்றெல்லாம் இயற்கையுடன் ஒன்றிய வகையில் அவற்றைத் தயாரித்து வருகின்றனர். இன்னும் சிலர் உடைக்கு ஏற்ற வகையிலான மேட்சிங் மாஸ்க், டிசைனர் மாஸ்க் என்று அதையும் ஒரு அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இப்படி வித்தியாசமான மாஸ்க் கண்டுபிடித்தவர்களைக் கூட வியப்பில் ஆழ்த்தியுள்ளார் புனேவை சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர். கழுத்து, கை, விரல்கள் என்றும் மொத்தமும் தங்க ஆபரணங்களால் ஜொலிக்கும் அவர் தங்கத்தால் ஆன மாஸ்க்கையும் உருவாக்கியுள்ளார். அந்த மாஸ்க்கின் விலை தான் பலரையும் தலை சுற்ற வைத்து விட்டது. இந்த தங்க மாஸ்க்கின் விலை 2.90 லட்சம் ரூபாய் என்கிறார் ஷங்கர். மூச்சு விடுவதற்காக அதில் சிறிய துளைகள் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

வைரஸிடம் இருந்து இந்த மாஸ்க் தன்னைப் பாதுகாக்குமா என்பது தெரியவில்லை என்றாலும் மூச்சு விடுவதில் சிரமம் இல்லை என்கிறார் புனேவின் இந்த தங்க மனிதர். இது தொடர்பான புகைப்படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share