மலையாளத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் புலிமுருகன். மலையாள மொழியில் அதிக செலவில் எடுக்கப்பட்ட முதல் படமும் இதுதான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 50, 100 கோடி செலவில் படம் தயாரிப்பது மலையாள திரையுலகில் சாதாரணமாகி விட்டது.
தற்போது புலி முருகன் படத்தின் இயக்குனர் வைசாக்கும், மோகன்லாலும் மீண்டும் மான்ஸ்டர் என்கிற படத்திற்காக இணைந்து உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக லட்சுமி மஞ்சு நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் மூத்த நடிகர் மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு, தேர்வு செய்யப்பட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். வழக்கமான கதாநாயகிகள் போன்று வாய்ப்புகளை தேடிப்போவது இல்லை. வருகின்ற எல்லா படங்களிலும் நடிப்பது இல்லை. தமிழில் காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார் லட்சுமி மஞ்சு.
இந்நிலையில் மோகன்லாலுக்கு ஜோடியாக மான்ஸ்டர் படம் மூலம் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்த மோகன்லாலை அழைத்து தனது வீட்டில் விருந்து கொடுத்திருந்தார் மோகன்பாபு. அப்போது அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டு இந்த தகவலை தனது சமூக வலைத்தளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.
**-இராமானுஜம்**
�,