லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மாமல்லபுரத்தில் இன்று (ஜூன் 9) வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரைத்துறையினரை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமை தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு விட்டதால், நிகழ்ச்சிக்கு வந்த விஐபிகள் கூட போட்டோ எடுத்துக் கொள்ள முடியாமலும் போட்டோ எடுத்துக்கொண்டாலும் அதை வெளியிட முடியாத சூழலும் ஏற்பட்டது.
நயன்தாராவின் லட்சக் கணக்கான ரசிகர்கள் அவரது திருமண காட்சியை காண்பதற்காக காத்திருந்த நிலையில், திருமணம் முடிந்து சில மணி நேரங்கள் கழித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
**-பிரியா**