மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் லாபம். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இப்படத்தின் ரிலீஸூக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருக்கிறது.
இயற்கை, ஈ, பேராண்மை, பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை படங்களை இயக்கிய கம்யூனிச சித்தாந்தவாதி எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகிவந்த படம் லாபம். இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளில் இருக்கும் போது, எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவினால் மறைந்தார்.
படத்துக்கான முக்கால் பாக பணிகளை ஏற்கெனவே முடித்திருந்தார் எஸ்.பி.ஜனநாதன். இந்நிலையில், படத்துக்கான அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. இப்படத்தை வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் படங்கள் தள்ளிப் போகிறது. சசிகுமாரின் எம்.ஜி.ஆர்.மக���், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தள்ளிப் போகிறது. ஆனால், எதற்கும் அஞ்சாமல் படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள் லாபம் டீம். அதன்படி, படத்தை ரம்ஜான் ஸ்பெஷலாக மே 14ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு உறுதி செய்துள்ளது.
அதோடு, படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் வெளியாகியுள்ளது. இந்தப் பாட்டோட ஸ்பெஷல் என்னவென்றால், இப்பாடலை எஸ்.பி.ஜனநாதனுக்கு சமர்பிப்பதாக விஜய்சேதுபதி கூறியுள்ளார். அவர் சொன்ன மாதிரியே பாடல் முழுவதும் ஜனநாதனே நிறைந்திருக்கிறார். படத்தின் மேக்கிங் வீடியோவை பாடல் முழுவதும் கொடுத்திருக்கிறார்கள். பாடல் முடிவில் விஜய்சேதுபதியை கட்டிப் பிடிப்பதோடு முடிகிறது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் ரம்ஜானுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப் போகிறது. அதனால், அந்த நாளில் லாபம் வெளியாக இருக்கிறது. அதோடு, படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
**- ஆதினி**
.�,”