fஎஸ்.பி.ஜனநாதனின் லாபம் ரிலீஸ் எப்போது?

Published On:

| By Balaji

விஜய்சேதுபதி நடிப்பில் மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் லாபம். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. .

கம்யூனிச சித்தாந்தங்களுடன் திரைப்படங்களை மக்களுக்காக இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். 2003ல் வெளியான இயற்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு, ஈ, பேராண்மை, பொறம்போக்கு எனும் பொதுவுடைமை படங்களை கொடுத்தவரின் இறுதிப் படைப்பு ‘லாபம்’.

சமீபத்தில், லாபம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இருக்கும் போதுதான், திடீரென யாரும் எதிர்பாராத பேரிழப்பாக எஸ்.பி.ஜனநாதன் எனும் மாமனிதன் மறைந்தார். இவருக்கு செய்யும் ஒரே அர்பணிப்பாக இவரின் படத்தை ரிலீஸ் செய்வதுதான் இருக்க முடியும். அதற்கான பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது படக்குழு.

விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, சாய் தன்ஷிகா, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடிப்பில் கம்யூனிசப் படமாக ‘லாபம்’ உருவாகிவருகிறது. டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துவருகிறார். படப்பிடிப்பு, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே மீதமிருக்கிறது. எஸ்.பி.ஜனநாதனே படத்துக்கான முக்கால்பாகப் பணிகளை முடித்துவிட்டதாகத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. அதோடு, படத்தை ஏப்ரல் மாதம் தமிழ் & தெலுங்கு மொழிகளில் வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

– ஆதினி

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel