‘மதுபான கடை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கமலக்கண்ணன். அரசியலை நையாண்டி செய்யும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. ரஃபீக், ஐஸ்வர்யா, என்.டி.ராஜ்குமார், ‘பூ’ ராமு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். வேத் சங்கர் இசையமைத்தார். 2012-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.
இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வணிகரீதியாகத் தோல்வியடைந்த படம். இதனைத் தொடர்ந்து சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள பெயரிடப்படாத படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு கமலக்கண்ணன் இயக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘குரங்கு பெடல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். இந்தப் படம் இயக்குநர் ராசி அழகப்பனின் சிறுகதையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
**-இராமானுஜம்**
�,