Kகோழிக்கோடு சாரதா காலமானார்!

Published On:

| By Balaji

பிரபல மலையாள குணசித்ர நடிகை கோழிக்கோடு சாரதா. நாடகங்களில் நடித்து வந்த இவர், 1979ம் ஆண்டு அங்காகுறி என்ற படம் மூலம் அறிமுகமாகி சல்லாபம், கண்ணெழுதி பொட்டும் தொட்டு, உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததும் குறும்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.

75 வயதான சாரதா, கோழிக்கோடு அருகே உள்ள வெள்ளிபரம்பாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மூச்சுத்திணறல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

**இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share