மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள KGF Chapter 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட ரசிகர்கள் மட்டுமின்றி, பாலிவுட் வரையிலான திரையுலகினர் பலரும் KGF படத்தின் இரண்டாம் பாக ரிலீஸை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். யாஷ் கதாநாயகனாக நடித்த KGF திரைப்படத்தில் கதை முடியாமல் இருந்ததால் அதன் தொடர்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வம் அனைவரது மத்தியிலும் இருந்தது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
— Yash (@TheNameIsYash) March 13, 2020
தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த வருடம் அக்டோபர் 23ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ஆர்ஆர்ஆர் படத்துக்குப் போட்டியாக KGF 2 ரிலீசாகுமா என்ற கேள்வி நிலவிவந்த நிலையில், முன்னதாகவே படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”