மீண்டும் பேரரசைக் கட்டியெழுப்ப வரும் கேஜிஎஃப்

Published On:

| By Balaji

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘கேஜிஎஃப் சேப்டர் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (டிசம்பர் 21) வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ், மலையாளம் எனப் பிறமொழிகளிலும் வெளியிடப்பட்டது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி திரைக்கு வந்தது. திரைப்படம் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது.

கேஜிஎஃப் வெளிவந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. அதைக் கொண்டாடும் விதமாக இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் மிகப் பெரிய தூண் ஒன்றை அழுக்கு உடை அணிந்து பலர் கஷ்டப்பட்டு இழுத்து வருகின்றனர். அவர்களின் முன்னால் யாஷ் நின்று இழுப்பதாக போஸ்டர் அமைந்துள்ளது. அத்துடன் Rebuilding an Empire என்னும் வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது.

விஜய் கிருகந்தரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் கேஆர்ஜே ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடும் இந்தப் படத்தைத் தமிழில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷால் வெளியிடவுள்ளார்,

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share