cரவிவர்மன் ஓவியமாகக் கீர்த்தி சுரேஷ்

Published On:

| By Balaji

i

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் 2013ல் மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ் .

அதைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு பிறகு மோகன்லால் நடிக்கும் ‘மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரது சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோரும் நடித்துள்ளார்கள்.. டிசம்பர்2 ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ஆர்ச்சா என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் 16ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷின் உருவத்திற்கு யாரை மாடலாக எடுக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது. அதற்காக வேறு எங்கும் தேடாமல் ரவிவர்மனின் ஓவியங்களிலிருந்தே கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்கள். இது சம்பந்தமான புகைப்படங்களுடன் படத்தில் தான் நடித்துள்ள சில புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

**-அம்பலவாணன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share