100 மில்லியன் பார்வைகளை கடந்த ‘காட்டுப் பயலே’

Published On:

| By Balaji

தமிழ் சினிமா பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் யூடியூப்பில் கடப்பது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இசை, பாடல் வரிகள், நடனம், பாடகர், பாடகிகள் என அனைத்தும் சிறப்பாக இருக்கும் பாடல்கள் மட்டுமே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறுகின்றன.

தமிழ் சினிமா பாடல்களில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக ‘ரவுடி பேபி’ பாடல் 1300 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. 25க்கும் மேற்பட்ட பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக இருக்கின்றன.

அந்தப் பட்டியலில் புதிதாக ‘சூரரைப் போற்று’ படத்தில் இடம் பெற்ற ‘காட்டுப்பயலே’ பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து இடம் பிடித்துள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையில், சினேகன் எழுதி, தீ பாடிய பாடல் இது .இதற்கு முன்பு சூர்யா நடித்த ‘என்ஜிகே’ படத்தின் ‘அன்பே பேரன்பே…’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு மேல..’ ஆகிய பாடல்கள் 100 மில்லியன் பார்வை கணக் கடந்துள்ளன.

ஜிவி பிரகாஷ் இசையமைத்த தமிழ் பாடல்களில் இதற்கு முன்பு 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக ‘தெறி’ படத்தின் ‘என் ஜீவன்…’ பாடல் மட்டுமே உள்ளது. இப்போது இரண்டாவது பாடலாக ‘காட்டுப்பயலே’ 100 மில்லியன் பட்டியலில் இணைந்துள்ளது. இதன் தெலுங்குப் பாடலான ‘காட்டுக கண்ணுலே’ ஏற்கெனவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share