^விளைவுகளை எதிர்கொள்ள தயார்: கங்கனா

Published On:

| By Balaji

நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக வெற்றி பெற்றபோதுதான் நாடு உண்மையான சுதந்திரம் பெற்றதாகவும், 1947அம் ஆண்டு பெற்றது பிச்சை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கங்கனாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதோடு சமீபத்தில் கங்கனா ரணாவத்திற்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில், 1857ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ், ராணி லட்சுமி பாய் போன்றவர்களின் தியாகத்துடன் முதல் ஒருங்கிணைந்த சுதந்திரப் போராட்டம் நடந்ததாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி ஒரு போட்டோ ஒன்றையும் கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1857ம் ஆண்டு நடந்த போராட்டம் எனக்கு தெரியும். ஆனால் 1947-ம் ஆண்டு என்ன சுதந்திரப்போர் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. அது குறித்து யாருக்காவது தெரிந்திருந்து எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப கொடுக்க தயாராக இருப்பதோடு, நான் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன். முதல் சுதந்திரப் போராட்டம் குறித்து முழுமையாக தேடிய போது, 1857ம் ஆண்டு நடந்ததாக தெரியவந்தது

எனவேதான் ராணி லட்சுமி பாய் படத்தை எடுத்தேன். வலது சாரியிடம் தேசியவாதம் ஓங்கி இருந்தது. ஆனால் திடீரென அவை ஏன் காணாமல் போனது. பகத் சிங்கை காந்தி ஏன் சாகவிட்டார். நேதாஜி ஏன் கொலை செய்யப்பட்டார். அவருக்கு காந்திஜி ஏன் ஆதரவு கொடுக்கவில்லை. வெள்ளையர்கள் ஏன் நாட்டை பிரித்தார்கள்? இதற்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன். நான் தெரிவித்த கருத்துக்கான விளைவுகளை நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share