Qலோகேஷிடம் கமல் வைத்த கோரிக்கை

Published On:

| By Balaji

மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் படங்களென திரையுலகின் கவனம் ஈர்க்கும் இயக்குநராகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். விஜய் நடிக்க மாஸ்டர் இயக்கியதைத் தொடர்ந்து அடுத்தக் கட்டமாக கமல்ஹாசனை இயக்கத் தயாராகிவருகிறார்.

கமல்ஹாசன் நடிக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் விக்ரம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறது. தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார் கமல்ஹாசன். தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் விக்ரம் படப்பிடிப்பு துவங்குவதில் மாற்றம் இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

சமீபத்தில் விக்ரம் படத்துக்கான முழு ஸ்கிரிப்டையும் முடித்து கமல்ஹாசனிடம் கொடுத்திருக்கிறார் லோகேஷ். முழு கதையையும் படித்துமுடித்துவிட்டு சில மாற்றங்களை கதையில் சொன்னதாகத் தெரிகிறது. கமல்ஹாசன் சொன்ன கோரிக்கையை ஏற்று கதையில் சில மாற்றங்களையும் மேற்கொள்ள இருக்காராம் லோகேஷ் கனகராஜ்.

கொரோனா இரண்டாம் அலையால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதே தெரியாத சூழல் நிலவுகிறது. திடீரென முழு லாக்டவுன் வந்துவிட்டால் என்ன செய்வதென்று பல தயாரிப்பு நிறுவனங்கள் படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட திட்டமிட்டு வருகிறார்கள். அதன்படி, கமலின் விக்ரமும் விரைவாக படமாக்கி முடிக்க இருக்கிறார்களாம்.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் வில்லனாக ஃபகத்பாசிலும் முக்கிய ரோலில் விஜய்சேதுபதியும் நடிக்க இருக்கிறார்கள்.

கமல்ஹாசனுக்கு விக்ரம் மற்றும் இந்தியன் 2 படங்கள் கைவசம் இருக்கிறது. இவ்விரு படங்களின் படப்பிடிப்பையும் இந்த வருடமே முடித்துவிடவும் திட்டமாம். விக்ரம் எப்படியும் முடிந்துவிடும். இந்தியன் 2 படம் சிக்கலெல்லாம் தீர்ந்து, முடிந்துவிட வேண்டுமென்பதே கமலின் விருப்பமாகவும் இருக்கிறது.

**- தீரன்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share