கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கமல்ஹாசனே எழுதி பாடிய ‘பத்தல பத்தல’ என்ற பாடல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இசை ரசிகர்களிடம் மிகப் பெரிய ஹிட் ஆகியுள்ளது.
இந்த நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பார்வைத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி என்பவர் இந்தப் பாடலைத் தான் பாடி அதை இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து மாற்றுத்திறனாளியான திருமூர்த்தியை நடிகர் கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.
திருமூர்த்தியின் விருப்பம் இசைக் கலைஞர் ஆக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார்.
அதோடு நின்று விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் திருமூர்த்தி குறித்துப் பேசினார். இதையடுத்து திருமூர்த்தியை தனது இசைப் பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக ஏ.ஆர்.ரஹ்மான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக் கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
**-இராமானுஜம்**
மாற்றுத்திறனாளி கலைஞர்: ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசிய கமல்!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel