ரீமேக் வியாபாரம்: கமலைத் தேடிவரும் பெரும் தொகை!

Published On:

| By Balaji

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் படம் விக்ரம். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.

கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக கமல் நடிக்கிறார். அதோடு, பார்வை சவால்கொண்ட கேரக்டரில் வருவார் என்று சொல்லப்படுகிறது.

விஞ்ஞானி கதாபாத்திரத்தில் ஃபகத் பாசிலும், டெட்லி வில்லனாக விஜய் சேதுபதியும் படத்தில் நடிக்கிறார்களாம். படம் முழுக்க எக்கச்சக்க வில்லன்கள் இருப்பார்கள் என்றும் ஒரு தகவல். இந்த நிலையில் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்று சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். நாம் கூறியபடியே, கமல்ஹாசன் படத்தில் காளிதாஸ் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் மகன் ரோலில் காளிதாஸ் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு, மாஸ்டரில் பவானி ரோல் போல, இந்தப் படத்திலும் அழுத்தமான வில்லன் ரோலாக சேதுபதியின் கதாபாத்திரம் இருக்கும் என்கிறார்கள்.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பே சமீபத்தில்தான் தொடங்கியது. அதற்குள், விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு டிரேடிங் வட்டாரத்தில் அதிகமாகியுள்ளது. விக்ரம் படத்தின் இந்தி ரீமேக் உரிமைக்கு பெரும் தொகை விலை பேசப்படுகிறதாம். அதாவது, இந்தி ரீமேக் உரிமை மட்டும் 35 கோடி ரூபாய்க்கு விலை பேசியிருக்கிறது ஒரு பிரபல இந்தி படத் தயாரிப்பு நிறுவனம். இதற்கு முழு காரணம் லோகேஷ் கனகராஜ் தான்.

லோகேஷின் முதல் படமான ‘மாநகரம்’ படமானது மும்பைகர் எனும் பெயரில் இந்தியில் ரீமேக்காகி வருகிறது. அதோடு, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமும் இந்தியில் டப்பாகி வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், விக்ரம் படத்தின் ஒவ்வொரு செய்தியும், படத்தின் மதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதனால், படம் தயாராகும் முன்பே, இந்தி உரிமைக்கு பெரும் தொகை விலை பேசப்பட்டுவருகிறது.

**- தீரன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share