முதல்வரை சந்தித்த கமல்

Published On:

| By admin

நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று சென்னையில் நேரில் சந்தித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி,பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜுன் 3-ம் தேதி வெளியானபடம் ‘விக்ரம்’.
படம் வெளியான 10 நாட்களிலேயே உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரைகளில் இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் படத்தை வெளியிட்டு இருந்தது. படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியிருந்தது. தமிழ்நாடு முழுவதும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் அதிக விலைக்கு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை போன்றே விக்ரம் படத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதிக திரைகளில் குறைந்த நாட்களில் முதல் பத்து நாட்களில் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த படமாக விக்ரம் படம் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், சென்னை முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, நடிகர் கமல்ஹாசன் ‘ விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்றதையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார்

**- இராமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share