‘அண்ணாத்த ஆடுறார்: பாடலுக்கு ட்ரெட்மில்லின் மீது நடனமாடி பிரபலமான நடிகர் அஸ்வின் குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
கமல் மூன்று வேடங்களில் நடித்து 1989 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அபூர்வ சகோதரர்கள்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ’ பாடல் மிகவும் பிரபலமானது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் குமார் என்னும் நடிகர் அந்தப் பாடலுக்கு நடனமாடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். கமல்ஹாசன் போன்றே உருவ தோற்றம் கொண்ட நடிகர் அஸ்வின், ஓடிக்கொண்டிருக்கும் ட்ரெட்மில்லின் மீது மிக சாதாரணமாக நடந்தும், அசைந்தும், குதித்தும் நடனம் ஆடி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வந்தது.
மலையாளத்தில் ‘ஜேக்கோபின்றே ஸ்வர்கராஜ்யம்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் அஸ்வின் குமார், தமிழில் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரது நடன வீடியோ ஃபேஸ்புக், ட்விட்டர், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் மலையாளத்தின் முன்னணி நடிகர்கள், பிரபலங்கள் எனப் பலராலும் பகிரப்பட்டு வந்தது.
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! https://t.co/xDfE7PW7Z0
— Kamal Haasan (@ikamalhaasan) June 19, 2020
இந்த நிலையில் தனது பாடலுக்கு வித்தியாசமாக நடனமாடிய அஸ்வின் குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் செய்த நல்வினைகள் என் ரசிகரைச் சென்றடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!”.என்று குறிப்பிட்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”