Jகைதி பாய்ஸ் டு தளபதி பாய்ஸ்!

Published On:

| By Balaji

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 64 திரைப்படத்தில் தான் இணைந்திருப்பது குறித்து கைதி பட நடிகர் லல்லு தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்திற்கு தளபதி 64 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புது வருட பரிசாகத் தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த செய்தியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி64 ஃபர்ஸ்ட் லுக் குறித்த ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிப்பது குறித்து நடிகர் லல்லு பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தில் லல்லு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது தளபதி 64 வாய்ப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்தப்பதிவில், ‘ஒரு நேர்மறையான விஷயத்துடன் புது வருடம் ஆரம்பமாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் அண்ணாவின் செட்டில் இருக்கிறேன். உங்களுக்கு வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. இரண்டாவது படமாக தளபதியுடன் நடிப்பது ஒரு கனவு போலவே இருக்கிறது. கைதி பாய்ஸ் டு தளபதி 64 பாய்ஸ்’ என்று கூறியுள்ளார்.

இந்தப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், விஜே ரம்யா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share