ஜோதிகாவை கௌரவிக்கும் அமேசான் பிரைம்!

Published On:

| By Balaji

அக்டோபர் 18 அன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நடிகை ஜோதிகாவை கௌரவப்படுத்தும் வகையில் அவரது கணவர் சூர்யா தயாரித்திருக்கும் படம் உடன்பிறப்பே.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான ‘உடன் பிறப்பே’ திரைப்படம் இன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’’காற்றின் மொழி’ ‘பொன்மகள் வந்தாள்’ படங்களைத் தயாரித்த 2டி நிறுவனம் இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சசிகுமாரை மையமாக வைத்து உருவான ‘உடன்பிறப்பே’ திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறது.

முழுக்க கிராமப் பின்னணியில் அண்ணன், தங்கை பாசத்தை வைத்து உருவாக்கபட்ட இப்படத்தில் ஜோதிகாவுடன் சமுத்திரகனி , கலை , சூரி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இமான் இசையமைத்திருக்கிறார்.

நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு செய்யக்கூடிய முன்னேற்பாடுகளை போன்றே உடன்பிறப்பே படத்திற்கான விளம்பர ஏற்பாடுகளை 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் செய்திருக்கிறது

இன்று நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் அரண்மனை – 3 படத்திற்கான எதிர்பார்ப்புக்கு இணையாக உடன்பிறப்பே படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக இப்படம் திரையுலக பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு பாசமலர், கிழக்கு சீமையிலே என ஒரு மித்த கருத்தில் பாராட்டியுள்ளனர்

தமிழகத்தில் கொரோனா பொது முடக்கத்தின் போது திரையரங்குகள் இயங்கவில்லை அப்போது இணையத்தில் நேரடியாக வெளியான முதல் தமிழ் படம் ஜோதிகா நடிப்பில் தயாரிக்கப்பட்ட பொன் மகள் வந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை வெளியிட்ட அமேசான் பிரைம் ஜோதிகாவை கௌரவிக்கும் வகையில் ஜோதிகா 50 என்கிற லோகோவை அமேசான் பிரைம் தளத்தில் இன்று வெளியிடவுள்ளது.

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share