ஜெய்சங்கர் பாணியில் விஜய்சேதுபதி

Published On:

| By Balaji

விஜய் சேதுபதி நவீன ஜெய்சங்கராக மாறி வருகின்றார் என்கிறது கோடம்பாக்க வட்டாரம். படைப்புகளின் தரத்துக்காக நடித்து வந்த சேதுபதி, தற்போது 365 நாட்களும் ஜெய்சங்கர் போன்று நடித்து வருகிறார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில் ஜெய்சங்கர் நடிப்பில் வாரம் ஒரு திரைப்படம் வெளியாகி ‘வெள்ளிக்கிழமை நாயகன்’ என அழைக்கப்பட்டார்

அவரைப் போன்று அதிகப்படங்களில் நடித்துவரும் விஜய்சேதுபதி திரையரங்கு, ஓடிடி, தொலைக்காட்சி என மூன்று தளங்களிலும்தான் நடித்த வெவ்வேறு படங்கள் வெளியாகும் வகையில் செயல்பட்டு வருகின்றார்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் நான்கு திரைப்படங்கள் அடுத்த மாதம் வெளியாகவுள்ளன. இந்த நான்கில் 1 படம் மட்டுமே நேரடியாக தியேட்டரில் வெளியாகவுள்ளது

விஜய் சேதுபதி நடித்த ‘லாபம்’ திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதற்கடுத்த நாள் செப்டம்பர் 10-ம் தேதியன்று ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகிறது. அன்றே அத்திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகவுள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதியன்று விஜய் சேதுபதியின் மற்றொரு திரைப்படமான ‘அனபெல் சேதுபதி ஓடிடியில் வெளியாகிறது.

செப்டம்பர் 24-ம் தேதியன்று காக்கா முட்டைமணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் கடைசி விவசாயி படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என கூறப்பட்டாலும் லாபம் படத்தின் வெற்றியை பொறுத்தே ’கடைசி விவசாயி’ தியேட்டரா, ஓடிடியா என்பது முடிவு செய்யப்படும் என்கின்றனர்

இப்படி நான்கு படங்களுமே ஒரே மாதத்தில் வெளியாவது விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வாய்ப்பு ஜெய்சங்கருக்கு பின் எவருக்கும் தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கும் வாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

**-இராமானுஜம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share