ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் ஜெய் பீம் படம் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு இருளர் பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்து பேசும் படமாக உருவாகி வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்க, பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், நடிகை ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படத்தை தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இது உலகளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெற்றது.
உலக அளவில் பல சர்வதேச விருதுகளை குவித்த ஜெய் பீம் படம் கோல்டன் குளோப் நாமினேஷனிலும் இடம்பெற்றது. அதேபோன்று ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்திலும் ஜெய் பீம் காட்சிகள் வெளியாகின. இதையடுத்து ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெற்றதால், நேற்று வெளியிடப்பட்ட ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் ஜெய் பீம் படம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆஸ்கர் கமிட்டி சார்பில் பிப்ரவரி 8ஆம் தேதியில் ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடலில், ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியர்களில் ஒருவரான ஜாக்குலின் கோலே ‘சிறந்த படத்துக்கான பரிந்துரையில் ‘ஜெய் பீம்’ இடம்பெறும் என தெரிவித்திருந்ததார்.
ஆனால், நேற்று மாலை வெளியான இறுதிப் பட்டியலில் ஜெய் பீம் படம் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்குத் ’Belfast’, ‘CODA’, ’Don’t Look Up’, ‘Drive My Car’,’Dune’,’King Richard’, ’Licorice Pizza’, ’Nightmare Alley’, ‘The Power of the Dog’,’West Side Story’ ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளது.
இரண்டாவது முறையாக சூர்யாவின் படம் ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் இடம்பெற்று வெளியேறியுள்ளது. கடந்த 2020ஆம் வருடம் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் இடம்பெற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
wஆஸ்கர் இறுதி பரிந்துரையில் ‘ஜெய் பீம்’ இல்லை!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel