‘ஜெய் பீம்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

Published On:

| By Balaji

சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘பவர்’ வெளியாகியுள்ளது.

தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளது.

இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் படமான ஜெய் பீம், நீதிமன்ற வழக்காடலை களமாகக்கொண்டது. இந்தப் படத்தை திரையுலகம் மட்டுமல்லர்; அரசியல் வட்டாரத்தினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘பவர்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடலை படக்குழு நேற்று மாலை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவரான அறிவு எழுதிப் பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார்.

துள்ளலான இந்தப் பாடல், நேர்மையைப் பற்றியும், சமத்துவத்தை அடைய இருக்கும் போராட்டங்களைப் பற்றியும் பேசுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் சூர்யாவின் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை இந்தப் பாடல் உணர்த்துகிறது.

உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2021, நவம்பர் 2ஆம் தேதியன்று ‘ஜெய் பீம்’ திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசானின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share